புதன், 30 செப்டம்பர், 2020

ஒரு நன்மைச் செய்தால் பலமடங்கு கூலி

வினாடி வினா 

எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் ___ பங்கு நன்மை உண்டு. 

  1. 7
  2. 70
  3. 10
  4. 100

விடை: 3. 10; பத்து முதல் எழுநூறு வரை நன்மைகள் பதியப்படும்.

ஆதாரம்:
எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவரேனும் ஒரு தீமையைச் செய்தால் அதைப் போன்றதே அன்றி (அதிகமாக) அவருக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது. (குற்றத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்தோ அல்லது நன்மைக்குரிய கூலியைக் குறைத்தோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (6:160)

'ஓர் அடியார் இஸ்லாத்தைத் தழுவி, அவரின் இஸ்லாம் அழகு பெற்றுவிட்டால் அவர் அதற்கு முன் செய்த அனைத்துத் தீமைகளையும் அல்லாஹ் மாய்த்து விடுகிறான். அதன் பின்னர் 'ம்ஸாஸ்' (உலகில் சக மனிதனுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்குரிய தண்டனை) உண்டு! (அவர் செய்யும்) ஒவ்வொரு நல்லறத்திற்கும் அது போன்ற பத்து முதல் எழுநூறு வரை நன்மைகள் பதியப்படும். (அவர் புரியும்) ஒவ்வொரு தீமைக்கும் (தண்டனையாக) அதைப் போன்றதுதான் உண்டு. அதையும் அல்லாஹ் அவருக்கு மன்னித்து விட்டால் அதுவும் கிடையாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹுல் புகாரி: 41. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)

இறைவனின் பெரியதோர் அத்தாட்சியாகிய இறுதி நாள் வருவதற்கு முன்னர்...

வினாடி வினா 

இறைவனின் பெரியதோர் அத்தாட்சியாகிய இறுதி நாள் வருவதற்கு முன்னர்; நம்பிக்கை கொள்ளாதிருந்து அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் ஒரு ____ செய்யாதிருந்துவிட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை ஒரு பலனையும் அளிக்காது.

  1. நற்செயலும்
  2. தர்மமும்
  3. தீமையும்

விடை: 1. நற்செயலும்

ஆதாரம்:
வானவர்கள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உங்கள் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி வருவதையோ தவிர, (வேறெதனையும்) அவர்கள் எதிர் பார்க்கின்றனரா? உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி(யாகிய இறுதி நாள்) வருவதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாதிருந்து அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் ஒரு நற்செயலும் செய்யாதிருந்துவிட்டு அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை ஒரு பலனையும் அளிக்காது. ஆகவே, (அவர்களை நோக்கி ‘‘அப்பெரிய அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாமும் எதிர்பார்த்திருக்கிறோம்'' என்று (நபியே!) கூறுவீராக. (6:158)

கணவன் மார்க்கத்திற்கு மாற்றமாக கட்டளையிட்டால்...

வினாடி வினா 

கணவன் மார்க்கத்திற்கு மாற்றமாக கட்டளையிட்டால், மனைவி அதற்கு கட்டுப்பட வேண்டுமா?


விடை: 

மனைவி கணவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. அதே நேரத்தில் கணவன் மார்க்கத்திற்கு மாற்றமாக கட்டளையிட்டால் அதற்குக் கட்டுப்படக்கூடாது.


ஆதாரம்:

அலீ(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள், 'அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்' என்றார்கள்.15 

(ஸஹீஹுல் புகாரி: 7257. , அத்தியாயம்: 7. தயம்மும்)


ஆயிஷா(ரலி) அறிவித்தார் 

அன்சாரிகளில் ஒரு பெண் தம் மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரின் மகளின் தலைமுடி உதிர்ந்துவிட்டது. அவள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, 'என் கணவர், என்னுடைய தலையில் ஒட்டுமுடி வைத்துக்கொள்ளுமாறு பணிக்கிறார்'' என்று கூறினாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேண்டாம்! (ஒட்டுமுடிவைக்காதே) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்'' என்று கூறினார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 5205. , அத்தியாயம்: 5. குளித்தல்)


மனைவி எதற்கு பொறுப்பாளியாவாள்?

வினாடி வினா 

மனைவி எதற்கு பொறுப்பாளியாவாள்?


விடை: கணவனின் வீட்டைப் பாதுகாப்பதும், பிள்ளையை முறையாக வளர்ப்பதும் மனைவியின் பொறுப்பாகும்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' 

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள். 

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 136 

(ஸஹீஹுல் புகாரி: 5200. , அத்தியாயம்: 5. குளித்தல்)


பெண்கள் ஒட்டுமுடி வைத்துக்கொள்வதைப் பற்றி

வினாடி வினா 

பெண்கள் ஒட்டுமுடி வைத்துக்கொள்வதைப் பற்றி மார்க்கம் என்ன கூறுகிறது?


விடை: ஒட்டுமடி வைத்துக்கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.


ஆதாரம்:

ஆயிஷா(ரலி) அறிவித்தார் 

அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு அவர் நோயுற்று விட அதன் காரணத்தால் அவரின் தலைமுடி கொட்டிவிட்டது. எனவே, அவரின் உறவினர்கள் அவருக்கு ஒட்டு முடிவைக்க விரும்பி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஒட்டு முடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்') என்று கூறினார்கள். 

இதே ஹதீஸ் ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.122 

(ஸஹீஹுல் புகாரி: 5934. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)


மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் நான்கு காரியங்களை செய்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளார்கள்

வினாடி வினா 

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் நான்கு காரியங்களை செய்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளார்கள். அவை என்ன?


விடை:

1. தொழுகையை விட்டு விட வேண்டும்

மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டுவிடு. மாதவிடாய் நின்ற பின்பு குளித்து விட்டுத் தொழுது கொள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

[அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (228)]


2. நோன்பு நோற்கக் கூடாது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அதுதான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும்.

[அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : புகாரி (1951)]


3. தவாஃப் செய்வது கூடாது

நாங்கள் ஹஜ் செய்வதற்காக (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். (மக்காவை அடுத்துள்ள) ஸரிஃப் என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுதுகொண்டிருந்த என்னைப் பார்த்து உனக்கு என்ன மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று வினவினார்கள். நான் ஆம் என்று சொன்னேன். இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண்மக்கள் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஃபதுல்லாவைத் தவாஃப் செய்வதைத் தவிர ஹாஜிகள் செய்கின்ற மற்ற எல்லாக் காரியங்களையும் நீ செய்துகொள் என்று சொல்லிவிட்டு தங்கள் மனைவியருக்காக மாட்டைக் குர்பானி கொடுத்தார்கள்.

[அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (294)]


4. உடலுறவு கொள்வது கூடாது

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்.

[அல்குர்ஆன் (2 : 222)]


👆🏼👆🏼👆🏼

மாதவிடாயின் போது விட்டத் தொழுகைகளை திரும்பத் தொழ வேண்டியதில்லை; ஆனால் விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்க வேண்டும்.


எங்களுக்கு அது (மாதவிடாய்) ஏற்பட்டது. அப்போது விடுபட்ட நோன்பை (மாதவிடாய் நின்ற பிறகு) மீண்டும் நோற்குமாறு நாங்கள் கட்டளையிடப்பட்டோம். விடுபட்டத் தொழுகைகளை தொழுமாறு கட்டளையிடப்படவில்லை.

[அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (508)]


எந்த நபிக்கு கனவுகளை விளக்கக் கூடிய ஞானம் இருந்தது?

வினாடி வினா 

எந்த நபிக்கு கனவுகளை விளக்கக் கூடிய ஞானத்தை அல்லாஹ் அளித்திருந்தான்?

  1. நூஹ் நபி
  2. மூஸா நபி
  3. இப்ராஹிம் நபி
  4. யூசுப் நபி

விடை: 4. யூசுப் நபி

ஆதாரம்:

மேலும், ‘‘(நீ கனவில் கண்ட) இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் வியாக்கியானங்களையும் உனக்குக் கற்றுக் கொடுத்து, உன் மீதும், யஅகூபின் (மற்ற) சந்ததிகள் மீதும் அவன் தன் அருளை முழுமையாக்கி வைப்பான். இவ்வாறே இப்றாஹீம், இஸ்ஹாக் ஆகிய உன் இரு மூதாதைகள் மீதும் தன் அருளை முழுமைப்படுத்தி வைத்தான். நிச்சயமாக உன் இறைவன் (அனைத்தையும்) நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்'' (என்றும் கூறினார்). (சூரா யூசுஃப் - 12:6)

காணாத கனவைக் கண்டதாக சொல்வதன் விளைவுகள்

வினாடி வினா 

காணாத கனவைக் கண்டதாக சொல்வதன் விளைவுகள் என்ன?


விடை: 

'ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றோர் அறிவிப்பில் 'தம் கனவு குறித்து பொய் சொல்கிறவர்...' என்று வந்துள்ளது. 

(ஸஹீஹுல் புகாரி: 7042. , அத்தியாயம்: 7. தயம்மும்)

' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 


தம் கண் காணாத ஒன்றை அது கண்டதாகக் கூறுவது மாபெரும் பொய்களில் ஒன்றாகும். 

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 7043. , அத்தியாயம்: 7. தயம்மும்)


கெட்ட கனவு

வினாடி வினா 

கெட்ட கனவு கண்டால் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேணடும்?


விடை: 


அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

"நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஆகவே,உங்களில் ஒருவர் தாம் விரும்பாத ஒரு விஷயத்தை (கனவில்) கண்டால் (கண் விழிக்கும்போது) தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு, அதன் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இப்படிச் செய்தால்) அதனால் அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ கத்தாதா (ரலி) அவர்கள் சொன்னதை நான் செவியுற்றேன்.

மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மேலும், அவர் முன்பு படுத்திருந்த பக்கத்திலிருந்து திரும்பிப் படுத்துக்கொள்ளட்டும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 4551., அத்தியாயம்: 42. கனவுகள்)



நல்ல கனவு

வினாடி வினா 

நல்ல கனவு கண்டால் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேணடும்?


விடை: தமது நேசத்துக்குரியவரைத் தவிர வேறு யாரிடமும் அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டாம் 


ஆதாரம்:

அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃவ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்புகின்ற கனவொன்றைக் கண்டால் தமது நேசத்துக்குரியவரைத் தவிர வேறு யாரிடமும் அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டாம்." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 4553., அத்தியாயம்: 42. கனவுகள்)


கனவுகள் எத்தனை வகைப்பபடும்?

வினாடி வினா 

கனவுகள் மூன்று வகைப்பபடுகின்றன. அவை யாவை?


விடை: 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காலம் சுருங்கும்போது ஒரு முஸ்லிம் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. உங்களில் (நல்ல) உண்மையான கனவு காண்பவரே உண்மை பேசுகின்றவர் ஆவார். ஒரு முஸ்லிம் காணும் (நல்ல) கனவு நபித்துவத்தின் நாற்பத்தைந்து பாகங்களில் ஒன்றாகும். கனவுகள் மூன்று வகையாகும். நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தியாகும். கவலையளிக்கக்கூடிய கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். இன்னொரு வகை ஒரு மனிதரின் உள்ளத்தில் தோன்றுகின்ற பிரமையாகும்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 4555., அத்தியாயம்: 42. கனவுகள்)


எவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை அடைவார்?

வினாடி வினா

எவரிடம் மூன்று தன்மைகள் இருக்கின்றனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை அடைவார். அவை என்ன?


விடை: 


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

எவரிடம் மூன்று தன்மைகள் இருக்கின்றனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை அடைவார். (அவை:) 

  1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு மற்ற எல்லாவற்றையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 
  2. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 
  3. தாம் நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதைப் போன்று இறைமறுப்பிற்குத் திரும்புவதை அவர் வெறுப்பது.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 6941. , அத்தியாயம்: 7. தயம்மும்)


இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே உள்ள பாலம்

வினாடி வினா 

இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே எது பாலமாக இருக்கிறது?


விடை: தொழுகையைக் கைவிடுவது 


ஆதாரம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே (பாலமாக இருப்பது) தொழுகையைக் கைவிடுவது தான்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 134., அத்தியாயம்: 1. இறைநம்பிக்கை)

அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமையும்; அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமையும் என்ன?

வினாடி வினா 

அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமையும்; அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமையும் என்ன?


விடை: 

அல்லாஹ்வை வணங்குவதும் அவனுக்கு எதையும் இணைவைக்காமலிருப்பதும் ஆகும். (அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீது உரிமை அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமலிருப்பது


ஆதாரம்:

முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'முஆதே! அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் அவனையே வணங்குவதும் அவனுக்கு எதையும் இணைவைக்காமலிருப்பதும் ஆகும். (அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்க, நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமலிருப்பது தான்' என்று பதிலளித்தார்கள்.

(ஸஹீஹ் புகாரி : 7373. அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு)


தஜ்ஜால் மதீனாவின் ஓர் ஓரத்தில் இறங்கிய பிறகு மதீனா எத்தனை முறை குலுங்கும்?

வினாடி வினா 

தஜ்ஜால் மதீனாவின் ஓர் ஓரத்தில் இறங்கிய பிறகு மதீனா _____ முறை குலுங்கும்.

  1. ஒரு
  2. இரண்டு
  3. மூன்று
  4. நான்கு

விடை: 3. மூன்று 


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
தஜ்ஜால் வருவான்; வந்து மதீனாவின் ஓர் ஓரத்தில் இறங்குவான். பிறகு மதீனா மும்முறை குலுங்கும். உடனே ஒவ்வோர் இறைமறுப்பாளனும் நயவஞ்சகனும் அவனை நோக்கிப் புறப்படுவார்கள். 
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.59 
(ஸஹீஹுல் புகாரி: 7124. , அத்தியாயம்: 7. தயம்மும்)

உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு ஏன் உதவ வேண்டும்?

வினாடி வினா 

'உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்' என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அது எப்படி?


விடை: அவனை அக்கிரமம் செய்ய விடாமல் தடுப்பதன் மூலம்


ஆதாரம்:

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்' என்றார்கள். அப்போது ஒருவர், இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்திற்குள்ளானவனுக்கு நான் உதவுவேன். (அதுதான்.) அக்கிரமக்காரனுக்கு எப்படி நான் உதவுவேன்? கூறுங்கள்!' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அவனை அக்கிரமம் செய்ய விடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அக்கிரமக்காரனுக்குச் செய்யும் உதவியாகும்' என்றார்கள்.21 

(ஸஹீஹ் புகாரி : 6952. அத்தியாயம் : 89. (குற்றங்கள் புரியுமாறு) நிர்ப்பந்திக்க)


பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவரின் நிலை

வினாடி வினா 

பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவரின் நிலை என்ன?


விடை: 

அபூ ஸலமா(ரலி) அறிவித்தார். 

எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்' என்று கூறினார்கள். 

(ஸஹீஹ் புகாரி : 2453. அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்)


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய் விடுவான். 

இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹ் புகாரி : 2454. அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்)



முஃமின்கள் யாரை பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளக் கூடாது?

வினாடி வினா 

முஃமின்கள் யாரை பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம் என அல்லாஹ் எச்சரிக்கிறான்?


விடை: யூதர்களையும், கிறிஸ்தவர்களையும்.


ஆதாரம்:

நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக இருக்கின்றனர். உங்களில் எவரும் அவர்களில் எவரையும் (தனக்கு) நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்த மாட்டான். (அல்-குர்ஆன் 5:51)


ஒரு இறைநம்பிக்கையாளர் இன்னொரு இறைநம்பிக்கையாளர் விஷயத்தில் நடக்க வேண்டிய விதம்

வினாடி வினா 

ஒரு இறைநம்பிக்கையாளர் இன்னொரு இறைநம்பிக்கையாளர் விஷயத்தில் எவ்வாறு நடக்க வேண்டும்?


விடை: ஒரு கட்டிடித்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கிறதோ அது போன்று.


ஆதாரம்:

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். 

'ஒரு கட்டிடித்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கிறதோ அது போன்றே ஒரு இறைநம்பிக்கையாளர் இன்னொரு இறைநம்பிக்கையாளர் விஷயத்தில் நடக்க வேண்டும்' என்று நபி(ஸல்) கூறிவிட்டுத் தம் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 481. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


ஷைத்தானின் ஊசலாட்டத்தின் உச்சக்கட்டம்

வினாடி வினா 

நம் மனதிற்குள் ஷைத்தான் வந்து, ”இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?” என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், ”உன் இறைவனைப் படைத்தவர் யார்?” என்று கேட்கிறான். இந்தக் கேள்வி கேட்கும் கட்டத்தை நாம் அடையும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?


விடை: அந்தக் கட்டத்தை நாம் அடையும்போது நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும். அத்தகைய சிந்தனையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, 'இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?' என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், 'உன் இறைவனைப் படைத்தவர் யார்?' என்று கேட்கிறான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக் கொள்ளட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 3276. , அத்தியாயம்: 3. கல்வியின் சிறப்பு)



எந்த மரம் இறைநம்பிக்கையாளனுக்கு உவமையாகும்?

வினாடி வினா 

எந்த மரம் இறைநம்பிக்கையாளனுக்கு உவமையாகும்?

  1. முள் மரம்
  2. பேரீச்சை மரம்
  3. கள்ளி மரம்
  4. வாழை மரம்

விடை: 2. பேரீச்சை மரம்.

ஆதாரம்:
ஒரு மரம் உள்ளது. அம்மரத்தின் இலைகள் உதிர்வதில்லை. அம்மரம் இறைநம்பிக்கையாளனுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று கூறுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர். மக்களின் சிந்தனை கிராமப் புறத்தில் உள்ள மரங்களின் பால் சென்றது. அது பேரீச்சை மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (நான் சிறுவனாக இருந்ததால் அதைக் கூற) வெட்கமடைந்ததேன். அப்போது மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! நீங்களே கூறுங்கள்' என்றனர். 'அது பேரீச்சை மரம் தான்' என்று நபி(ஸல்) கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை கூறினேன். அதைக் கேட்ட அவர்கள் 'நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்ன எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்' என்றார்' என்றும் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார் 
(ஸஹீஹுல் புகாரி: 131. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)

கழிவறைக்குள் இருக்கும் போது ஒருவர் ஸலாம் சொன்னால் பதில் சொல்லலாமா?

வினாடி வினா 

கழிவறைக்குள் இருக்கும் போது ஒருவர் ஸலாம் சொன்னால் பதில் சொல்லலாமா?

  1. சொல்லலாம்
  2. கூடாது

விடை: 2. கூடாது 


ஆதாரம்:

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்துசென்ற மனிதர் ஒருவர் சலாம் சொன்னார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் சலாம் சொல்லவில்லை.
(ஸஹீஹ் முஸ்லிம் : 606. அத்தியாயம் : 3. மாதவிடாய்)


அன்பளிப்பை திரும்பப் பெற்றுக் கொள்வது எதனை போன்றது?

வினாடி வினா 

நாம் ஒருவரிடம் கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெற்றுக் கொள்வது எதனை போன்றது என நபி(ஸல்) கூறினார்கள்?


விடை: தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல. 

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 2622. , அத்தியாயம்: 3. கல்வியின் சிறப்பு)


திருடர்களில் மிகவும் மோசமான திருடன் யார்?

வினாடி வினா 

திருடர்களில் மிகவும் மோசமான திருடன் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?


விடை: தொழுகையில் திருடுபவன்; தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்.


ஆதாரம்:

''திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, ''அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?'' என நபித்தோழர்கள் கேட்டனர். ''தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.  அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி­) 

(நூல்: அஹ்மத் 11106)


ஷைத்தானின் கூட்டாளி

வினாடி வினா 

அல்லாஹ் யார் யாரை ஷைத்தானின் கூட்டாளி என்று குறிப்பிடுகிறான்?


விடை: மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே தங்கள் பொருள்களைச் செலவு செய்வதுடன் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதிருப்பவர்கள்.


ஆதாரம்:

எவர்கள் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே (பெருமைக்காகத்) தங்கள் பொருள்களைச் செலவு செய்வதுடன் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன். ஆகவே,) எவனுக்கு ஷைத்தான் நண்பனாக இருக்கிறானோ அவன் நண்பர்களிலெல்லாம் மிகக் கெட்டவன் ஆவான். (4:38)


ஷைத்தான் எதைக் கொண்டு நமக்கு பயம் காட்டுகிறான்?

வினாடி வினா 

ஷைத்தான் எதைக் கொண்டு நமக்கு பயம் காட்டுகிறான்?


விடை: ஷைத்தான் வறுமையைக் கொண்டு நமக்கு பயம் காட்டுகிறான்.


ஆதாரம்:

(நீங்கள் தர்மம் செய்தால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயங்காட்டி மானக்கேடான (கஞ்சத்தனத்)தைச் செய்யும்படி உங்களைத் தூண்டுவான். ஆனால், அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன் மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்குத் தருவதாக) வாக்களிக்கிறான். மேலும், அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான். (2:268)


தஜ்ஜாலின் கால வரையறை

வினாடி வினா 

தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்?


விடை: தஜ்ஜால் நீண்ட நாட்கள் ஆட்டம் போட முடியாது. வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே அவன் இவ்வுலகில் இருப்பான்.

ஆதாரம்:


'தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான் " என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5228)


ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வத்தின் நிலை

வினாடி வினா 

அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய __________ மாறும்.

  1. உணவாக
  2. பாம்பாக
  3. தண்ணீராக

விடை: 2. பாம்பாக

ஆதாரம்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்'  'நானே உன்னுடைய புதையல்' என்று கூறும்.' 
இதைக் கூறிவிட்டு, 'அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.' என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள். 
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
(ஸஹீஹுல் புகாரி: 1403. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)

நாவுக்கு எளிதானவை, தராசில் கனமானவை.

வினாடி வினா 

எந்த இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகவும், தராசில் கனமானவையாகவும்,  அல்லாஹ்வின் பிரியத்திற்குரியவையுமாகவும் கருதப்படுகிறது?


விடை: சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி 


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும். தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி. 

(பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.) 

(ஸஹீஹுல் புகாரி: 6406. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)


நரகத்திற்கு அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்று

வினாடி வினா 

________ செய்ததனால் (ஏற்பட்ட) வடுக்களை நரகம் தீண்டுவதை நரகத்திற்கு அல்லாஹ் ஹராமாக ஆக்கிவிட்டான்.


விடை: ஸஜ்தா


ஆதாரம்:

நரக வாசிகளில் அல்லாஹ் நாடுபவர்களுக்கு அருள் செய்ய எண்ணும்போது, அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நரகிலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு உத்தரவிடுவான். வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள். ஸஜ்தாச் செய்த அடையாளத்தை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள். ஸஜ்தாச் செய்ததனால் (ஏற்பட்ட) வடுக்களை நரகம் தீண்டுவதை நரகத்திற்கு அல்லாஹ் ஹராமாக ஆக்கிவிட்டான். அவர்கள் நரகிலிருந்து வெளியேற்றப் படுவார்கள். ஸஜ்தாவின் வடுவைத் தவிர மனிதனின் முழு உடம்பையும் நரகம் சாப்பிட்டு விடும். (ஸஹீஹுல் புகாரி: 806. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு...

வினாடி வினா 

'குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு _______ தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

  1. நரகம்
  2. கேடு
  3. அழிவு

விடை: 1. நரகம்

ஆதாரம்:
'நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) 'குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் 
(ஸஹீஹுல் புகாரி: 60. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)

சொர்க்கம் செல்ல...

வினாடி வினா 

கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்' என்றார். அதற்கு நபி(ஸல்) என்ன பதில் கூறினார்கள்?


விடை: அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமலானில் நோன்பு நோற்கவேண்டும்.


ஆதாரம்:

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமலானில் நோன்பு நோற்கவேண்டும்' என்றார்கள். அதற்கவர், 'என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! இதைவிட அதிகமாக எதையும் செய்ய மாட்டேன்' என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், 'சுவர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்' என்றார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 1397. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


எதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்?

வினாடி வினா 

எதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்?


விடை: ஐவேளைத் தொழுகைகளின் மூலம். 


ஆதாரம்:

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

'உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்' என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது' என நபித் தோழர்கள் கூறினர். 'இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 528. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


பெற்றோருக்கான துஆ

வினாடி வினா 

நம்முடைய பெற்றோருக்காக நாம் எவ்வாறு துஆச் செய்ய வேண்டும் என அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்?


விடை: என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீது அன்பும் அருளும் புரிவாயாக!'


ஆதாரம்:

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! மேலும், ‘‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்றும் பிரார்த்திப்பீராக! (17:24)




இக்லாஸ் - உள்ளத்தூய்மை

வினாடி வினா 

செயல்கள் அனைத்தும் எதை பொருத்தே அமைகின்றன?


விடை: செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன.


ஆதாரம்:

'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 1. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


நாம் முழுமையான இறைநம்பிக்கையாளராக...

வினாடி வினா 

நாம் _______ (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டோம். 

  1. உள்ளச்த்தோடு தொழும் வரை
  2. தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை
  3. ஏழைகளுக்கு உணவளிக்கும் வரை

விடை: 2. தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை

ஆதாரம்:

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
(ஸஹீஹுல் புகாரி: 13. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


பெண்கள், சமூக வலைத்தளங்களில், செயலி’களில்(apps) மற்றும் புரோஃபைல் படங்களில்(profile picture) தங்கள் படங்களை பதிவேற்றம் செய்வது பற்றி

வினாடி வினா 

பெண்கள், சமூக வலைத்தளங்களில், செயலி’களில்(apps) மற்றும் புரோஃபைல் படங்களில்(profile picture) தங்கள் படங்களை பதிவேற்றம் செய்வது பற்றி இஸ்லாமிய பார்வை என்ன?


விடை: ஒரு பருவமடைந்த பெண், ஹிஜாப் அணிந்தவாறோ அல்லது அணியாதவாறோ தன் படங்களை சமூக வலைத்தளங்களிலோ, செயலி’களிலோ(apps) மற்றும் புரோஃபைல் படங்களிலோ(profile picture) பதிவேற்றம் செய்வது பல காரணங்களுக்காக ஹராமாக கருதப்படுகிறது.


இது பெண்ணுக்கும் அவளைப் பார்ப்பவர்களுக்கும் தீமைக்கான கதவைத் திறக்கிறது. நவீன தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில், தீங்கான எண்ணம் கொண்டவர்களின் கைகளில் அப்படங்கள் சேர்ந்தால், என்னென்ன நடக்கலாம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 

“என்னுடைய வலைத்தள பக்கங்களை தெரியாதவர்கள் பார்க்காதவாறு அமைத்துள்ளேன்” என்று சிலர் கூறுவர்(privacy settings). ஒவ்வொரு வலைத்தளங்களையும் செயலிகளையும் நிர்வகிப்பவர்களும் உங்கள் அந்நியர்களே என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். எப்பொழுது உங்கள் படங்களை பதிவேற்றம் செய்கிறீர்களோ, அப்பொழுதே ஃபித்னாவுக்கு வழிவகுகின்றீர்கள்.

அகற்றப்பட்ட படங்களை மீட்டெடுக்க தொழில்நுட்பம் உள்ள போது, நீங்கள் எவ்வளவு “privacy settings” செய்திருந்தாலும், உங்கள் வலைத்தள பக்கங்களுக்கும் சென்று உங்கள் படங்களையும் காண தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர்களுக்கு வழி இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

ஒரு பெண் மற்றொரு பெண்ணைப் பற்றி தன் கணவனிடம் வர்ணித்துக் கூறுவது கூடாது என ஹதீஸ் உள்ளது. ஆகவே, தன் படங்களை போடுவது தானாகவே முன்வந்து தங்கள் அழகை அந்நியர்களிடம் வெளிப்படுத்துவது போல் ஆகிவிடும். 


ஆதாரம்:

இந்த குர்ஆன் வசனத்தை உற்று நோக்கவும் → (24:31)

அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "ஆண்களுக்குப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் எனக்குப் பிறகு நான் விட்டுச்செல்லவில்லை." (உஸாமா இப்னு ஸைத்(ரலி) (ஸஹீஹுல் புகாரி:5096).


👆🏼👆🏼👆🏼

ஆகவே எனது அன்பு சகோதரிகளே... இதுவரை நாம் இந்த தவற்றை செய்திருந்தால், பதிவேற்றம் செய்த அனைத்து படங்களையும் இன்றே அகற்றுவோம். சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ். 

வாட்ஸ்அப் புரோஃபைல் படங்களாக உங்கள் படங்களை வைத்திருந்தீர்கள் என்றால் அதையும் அகற்றி விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இதுவரை தெரிந்தோ தெரியாமலோ இந்த தவற்றை செய்திருந்தால், அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து, அதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்வோம். 

உங்களுக்கு தெரிந்த அனைத்து சகோதரிகளுக்கும் இச்செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள். 

பெண்களாகிய நாம், எந்த ஆணுக்கும் சோதனையாகி விடுவதை விட்டும் அல்லாஹ் நாம் அனைவரையும் பாதுகாப்பானாக!




வஹீ எவ்வாறு வந்தது?

வினாடி வினா 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எவ்வாறு வந்தது?


விடை:

ஹாரிஸ் இப்னு ஹிஷாம்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?' எனக் கேட்டதற்கு, 'சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்' என ஆயிஷா(ரலி) குறிப்பிட்டார். மேலும், 'கடும் குளிரான நாள்களில் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி(ஸல்) அவர்களைவிட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்' என ஆயிஷா(ரலி) கூறினார்.

(ஸஹீஹுல் புகாரி: 2. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)

ஆயிஷா(ரலி) கூறினார். 

'நபி(ஸல்) அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள்….

(ஸஹீஹுல் புகாரி: 3. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


தொழுகையில் மறதி

வினாடி வினா 

கடமையான தொழுகைகளில், மறதியின் காரணமாக எத்தனை ரக்அத்துகள் தொழுதோம் என்ற சந்தேகம் வருவதுண்டு. அச்சூல்நிலைகளில் நாம் என்ன செய்வது?


விடை: கடைசி இருப்பில் ஸலாத்திற்கு முன் தக்பீர் கூறி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு ஸலாம் கொடுக்க வேண்டும்


ஆதாரம்:

'தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி 'இதை இதையெல்லாம் நினைத்துப்பார்' எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடிக்கிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்களில் மூன்றா அல்லது நான்கா என்று தெரியவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தாச் செய்து கொள்ளட்டும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 1231. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)

அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். 

அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, மக்களும் நபி(ஸல்) அவர்களோடு எழுந்துவிட்டார்கள். தொழுகை முடியும் தருவாயில் நாங்கள் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்திருந்தபோது, அந்த இருப்பிலேயே ஸலாத்திற்கு முன் தக்பீர் கூறி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு ஸலாம் கொடுத்தார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 1224. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


நாம் மறந்ததை மற்றவர்கள் நமக்கு தெரிவித்தால்…👇🏼

அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடம் தொழுகை அதிகமாக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'என்ன விஷயம்?' எனக் கேட்டார்கள். 'நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுகை நடத்தினீர்கள்' என ஒருவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 1226. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


நான்கு ரக்அத் தொழுகையில்) இரண்டாவது அல்லது மூன்றாவது ரக்அத்தில் (மறதியாக) சலாம் கொடுத்துவிட்டால்..👇🏼

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

அவர்கள் எங்களுக்கு லுஹரையோ அஸரையோ தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். அப்போது துல்யதைன்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களிடம், 'இவர் கூறுவது உண்மைதானா?' எனக் கேட்டபோது அவர்களும் 'ஆம்' என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுகை நடத்திவிட்டு இரண்டு ஸஜ்தாக்களும் செய்தார்கள். 

இப்னு ஸுபைர் மக்ரிப் தொழுகை நடத்தியபோது இரண்டு ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்துவிட்டுப் பேசியும்விட்டார். பின்பு (நினைவு வந்ததும்) மீதம் உள்ளதைத் தொழுதார். பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்துவிட்டு இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள் எனக் கூறினார்' என ஸஅத் அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 1227. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


பொய் சொல்பவன் எப்போது பொய்யனாகக் கருதப்பட மாட்டான்?

வினாடி வினா 

மக்களிடையே எதற்காகப் பொய் சொல்பவன் பொய்யனாகக் கருதப்பட மாட்டான்?


விடை: நல்லதை சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யனாகக் கருதப்பட மாட்டான்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

(பரஸ்பரம் பிணங்கிய இரண்டு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன். 

என உம்மு குல்தூம் பின்த்து உக்பா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 2692. , அத்தியாயம்: 3. கல்வியின் சிறப்பு)


சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர்

வினாடி வினா 

சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் எவ்வாறு காட்சியளிப்பார்கள்?


விடை: அணியினர் பெளர்ணமி இரவில் (ஒளிவீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) காட்சியளிப்பார்கள்


ஆதாரம்:

'சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பெளர்ணமி இரவில் (ஒளிவீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள்; எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களின் மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களின் தந்தை ஆதம்(அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 3327. , அத்தியாயம்: 4. உளூச் செய்வது)

நபி (ஸல்)அவர்கள் தம் கைகளை அதிகம் உயர்த்திய பிரார்த்தனை

வினாடி வினா

எந்தப் பிரார்த்தனையின் போது நபி (ஸல்)அவர்கள் தம் கைகளை அதிகம் உயர்த்துவார்கள்?


விடை: மழைவேண்டிப் பிரார்த்தித்தபோது


ஆதாரம்:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தபோது தவிர, வேறு எந்தப் பிரார்த்தனையின் போதும் (இந்த அளவிற்கு) கைகளை உயர்த்தமாட்டார்கள். (மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது) தம் அக்குள்களின் வெண்மை தென்படும் அளவிற்கு அவர்கள் கைகளை உயர்த்தினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அப்துல் அஃலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்கள் "தமது அக்குளின் வெண்மை" அல்லது "அக்குள்களின் வெண்மை”  தென்படும் அளவிற்கு (உயர்த்தினார்கள்)" என்று (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 1631., அத்தியாயம்: 9. மழைத் தொழுகை)


மனிதன் மரணித்தவுடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்படுகின்றன

வினாடி வினா 

மனிதன் மரணித்தவுடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்படுகின்றன. அவை என்ன?


விடை: 

  1. நிரந்தர தர்மம்
  2. பயன்தரும் கல்வி
  3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல மகன்

ஆதாரம்:

மனிதன் மரணித்தவுடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்படுகின்றன. 1. நிரந்தர தர்மம், 2. பயன்தரும் கல்வி, 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல மகன்; என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம் 4310)


அரஃபா தின நோன்பு

வினாடி வினா 

எந்த அமல் செய்வதை நபி(ஸல்) அவர்கள் முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவ பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்கள்?


விடை: துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை


ஆதாரம்:

அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

……….துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 2151., அத்தியாயம்: 13. நோன்பு)


அரஃபா தினத்தின் நோன்பை ஹஜ் செய்பவர்கள் நோற்கக் கூடாது

உம்முல் ஃபள்ல்(ரலி) அறிவித்தார். 

அரஃபா நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே, நான் நபி(ஸல்) அவர்களுக்கு பானம் அனுப்பி வைத்தேன்; அதையவர்கள் குடித்தார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 1658. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


அரஃபா

வினாடி வினா 

அரஃபா என்றால் என்ன மற்றும் இந்த தினத்தின் மாண்புகள் என்ன?


விடை:

அரஃபா என்றால் என்ன? 👇🏼

சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு அனுப்பப்பட ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் முதன் முதலாக சந்தித்த இடம் அரஃபா ஆகும். இதனால்தான் இந்த இடத்திற்கு அரஃபா என்று பெயர் சொல்லப்படுகிறது, வேறு பல கருத்துக்கள் இருந்த போதும் இக்கருத்தே பிரபல்யமான கூறப்படுகின்றது.


அரஃபா தினம் என்றால் என்ன? 👇🏼

அரஃபா தினம் என்பது சங்கையான நான்கு மாதங்களில் உள்ள துல்ஹிஜ்ஜா மாதமாகிய ஒன்பதாம் நாளைக் குறிக்கும் இஸ்லாமிய வரலாற்றில் மிகச் சிறந்த நாளாகிய இந்நாள்தான் அரஃபா தினமாகும். அன்றைய நாளில்தான் ஹாஜிகள் அரஃபா எனும் இடத்தில் ஒன்று கூறுகின்றார்கள். அரஃபா மைதானத்தைப் பொருத்தவரை எப்போதும் வெறுமனே வெட்ட வெளியாகக் காட்சி தரும். ஆனால் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் ஹாஜிகள் ஒன்று கூடும் போது அந்த அரஃபா மைதானம் முக்கியத்துவம் பெறுகிறது.


அரஃபா தினத்தின் மாண்புகள் என்ன? 👇🏼

அரஃபா தினம் என்பது ஹிஜ்ரி ஆண்டின் பனிரெண்டாம் மாதமான துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாளன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அது வரலாற்று சிறப்பு மிக்க தினம். அன்றைய தினத்தில் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் எனும் வாழ்வியல் நெறியை முழுமைப்படுத்தினான்.


ஆதாரம்:

‘இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்.’ (திருக்குர்ஆன் 5:3)

இந்த வசனம் ஹிஜ்ரி 10–ம் ஆண்டு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கொண்ட ஹஜ்ஜின் போதும், துல்ஹஜ் பிறை 9–ம் நாளான அரஃபா தினத்தின் போதும தான் இறங்கியது.

​​இந்த வசனம் குறித்து அப்போதைய யூதர்கள் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கூறும் போது, ‘நீங்கள் ஓர் இறை வசனத்தை ஓதுகிறீர்கள். அந்த வசனம் மட்டும் எங்களிடையே இறங்கியிருந்தால், அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்றார்கள். அதற்கு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரபா (துல்ஹஜ் 9–ம்) நாளில் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அல்லாஹ்வின் மீது ஆணை! நாங்கள் அப்போது அரபாவில் இருந்தோம்’ என்று கூறினார்கள்.

​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் தாரிக்பின் ஷிஹாப் ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: புகாரி 4606

#அரபாதினத்தைவிடசிறந்தநாள்வேறெதுவும்_கிடையாது. மற்ற தினங்களைவிட அன்றைய தினத்தில் அதிகமான நரக கைதிகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் விடுதலை அளிக்கிறான். அன்று அல்லாஹ் அடியார்களிடம் நெருங்கி வந்து, அவர்களின் மாண்பு குறித்து வானவர்களிடம் பெருமை பாராட்டுகிறான் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்.

​​அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா

​நூல்: முஸ்லிம்


குர்பானி கொடுக்கும் பிராணிகளை அறுக்கும் முறைகள்

வினாடி வினா 

குர்பானி கொடுக்கும் பிராணிகளை அறுக்கும் முறைகள் எவ்வாறு வேறுபடுகின்றன?


விடை: 

ஆடு மாடுகளை ஒரு பக்கமாக படுக்க வைத்து அவற்றின் பக்கவாட்டில் காலை வைத்து அறுக்க வேண்டும்


ஆதாரம்:

அனஸ்(ரலி) கூறினார் 

நபி(ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் ('பிஸ்மில்லாஹ்') கூறினார்கள். தக்பீரும் ('அல்லாஹு அக்பர்') கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக் கொண்டு அறுத்)தார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 5565. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)


ஒட்டகங்களை நிற்கவைத்து அறுக்க வேண்டும்  


ஆதாரம்:

ஸியாத் இப்னு ஜுபைர் அறிவித்தார். 

'இப்னு உமர்(ரலி), அறுப்பதற்காகத் தம் ஒட்டகத்தைப் படுக்க வைத்திருந்த ஒருவரிடம் வந்து, 'அதைக் கட்டி நிற்க வைத்து அறுப்பீராக! அதுவே முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறை!' என்று கூறியதை பார்த்தேன்.' 

(ஸஹீஹுல் புகாரி: 1713. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


குர்பானி எத்தனை நாட்கள் வரையில் கொடுக்கலாம்?

வினாடி வினா 

குர்பானி எத்தனை நாட்கள் வரையில் கொடுக்கலாம்?


விடை: ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி முடிந்தது முதல், துல்ஹஜ் பிறை 13 வரை குர்பானி கொடுக்கலாம்.


ஆதாரம்:

தஷ்ரீக்குடைய நாட்கள் அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(அறிவிப்பாளர்: ஜுபைர் பின் முத்யிம்(ரலி), நூல்: அஹ்மத் 16752 - ஸஹீஹ்)

(தஷ்ரீக் நாட்கள் என்பது துல்ஹஜ்  11, 12, 13 ஆகும்)


குர்பானி பிராணிகளை எப்போது அறுக்க வேண்டும்?

வினாடி வினா 

குர்பானி பிராணிகளை எப்போது அறுக்க வேண்டும்?

  1. துல்ஹஜ் பிறை பத்து ஆரம்பித்ததிலிருந்து 
  2. துல்ஹஜ் பிறை பத்து அன்று ஃபஜ்ர் தொழுது முடித்ததிலிருந்து 
  3. பெருநாள் தொழுகை முடிந்ததிலிருந்து

விடை: 3. பெருநாள் தொழுகை முடிந்த பிறகே குர்பானி பிராணிகளை அறுக்க வேண்டும்

ஆதாரம்:

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார் 
(ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், 'இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு (தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப்பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவருக்கு அது, தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது' என்று கூறினார்கள். 
உடனே (தொழுகைக்கு முன்பு அறுத்து விட்டிருந்த) அபூ புர்தா இப்னு நியார்(ரலி) எழுந்து, '(இறைத்தூதர் அவர்களே!) என்னிடம் ஒரு வயதுடைய (வெள்ளாட்டு) குட்டி ஒன்று இருக்கிறது' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அதை அறுத்திடுவீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது' என்று கூறினார்கள்.
'(பெருநாள்) தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகி விடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழி முறையைப் பின்பற்றியவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என மற்றோர் அறிவிப்பில் உள்ளது. 
இதையும் பராஉ(ரலி) அவர்களே அறிவித்தார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: 5545. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)

👆🏼👆🏼👆🏼
தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டவர் என்ன செய்ய வேண்டும்?

ஜுன்தப்(ரலி) அறிவித்தார். 
நான் நபி(ஸல்) அவர்களுடன் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் இருந்தேன். அவர்கள் (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், 'தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டவர் அதற்குப் பகரமாக மற்றொரு பிராணியை அறுக்கட்டும். (தொழுது முடிக்கும்வரை) அறுக்காமலிருப்பர் (தொழுகைக்குப் பின்) அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கட்டும்' என்றார்கள்.35 
(ஸஹீஹுல் புகாரி: 7400. , அத்தியாயம்: 7. தயம்மும்)

கூட்டுக் குர்பானி

வினாடி வினா

கூட்டுக் குர்பானியில், ஒவ்வொரு பிராணிக்கும் எத்தனை பேர் கூட்டு சேரலாம்?


விடை: 

  1. ஆட்டிற்கு கூட்டுச் சேர முடியாது.
  2. மாட்டிற்கு ஏழு பேர் கூட்டு சேரலாம்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்)  அவர்களுடன் நாங்கள் ஹுதைபிய்யா ஆண்டில் 7 பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், 7 பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் குர்பானி கொடுத்தோம். 

(அறிவிப்பாளர்:  ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி), நூல்: முஸ்லிம் 3246)

 

3. ஒட்டகத்திற்கு 7 அல்லது 10 பேர் கூட்டு சேரலாம்  

நாங்கள் நபி(ஸல்)  அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தபோது ஹஜ்ஜுப்பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் 7 பேரும் ஒரு ஒட்டகத்தில் 10 பேரும் கூட்டு சேர்ந்தோம்.  (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: திர்மிதி 915 - ஸஹீஹ்)


குர்பானி கொடுக்கப்படும் பிராணிகளின் தன்மைகள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்

வினாடி வினா 

குர்பானி கொடுக்கப்படும் பிராணிகளின் தன்மைகள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்?


விடை: 

குர்பானி பிராணிகள் ஆரோக்கியமானதாகவும் எந்தக் குறையும் இல்லாததாகவும் இருத்தல் வேண்டும்.


ஆதாரம்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், 1. வெளிப்படையாக தெரியும் குருடு; 2. வெளிப்படையாக தெரியும் நோய்;  3. வெளிப்படையாக தெரியும் நொண்டி; 4. எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடைய பிராணிகளை குர்பானி கொடுக்கக்கூடாது.

(பராஉ பின் ஆஸிப்(ரலி), நூல்: அபூதாவூத் 2804 - ஸஹீஹ்)

இந்த ஹதீஸில் உள்ள “தெளிவாகத் தெரியக்கூடிய” என்ற வாசகம், குறை சிறியதாகவோ மறைமுகமாகவோ இருந்தால், அந்த பிராணிகளை குர்பானி கொடுப்பதில் குற்றமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.


குர்பானி கொடுக்கப்படும் பிராணிகளின் வயது வரம்பு

வினாடி வினா 

குர்பானி கொடுக்கப்படும் பிராணிகளின் வயது வரம்பை பற்றி ஹதீஸ்கள் என்ன கூறுகின்றன?


விடை: 

குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில்; ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆட்டிற்கு ஒரு வயதும், மாட்டிற்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் ஆட்டுக் குட்டியைக் கொடுக்கலாம்.


ஆதாரம்: 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், முசின்னா’வைத் தவிர வேறு எதையும் அறுக்காதீர்கள். அது சிரமமாக இருந்தால், ஆறு மாதத்தை பூர்த்தி செய்த செம்மறி ஆட்டை அறுங்கள்.

(அறிவிப்பார்: ஜாபீர் பின் அப்துல்லாஹ்(ரலி),  நூல்: முஸ்லிம் 5194)

ஆட்டில் ஒரு வருடத்தை மாட்டில் இரண்டு வருடத்தை பூர்த்தி செய்தவற்றையும், ஒட்டகத்தில் ஐந்து வருடத்தை பூர்த்தி செய்தவற்றையும் குறிப்பிட “முசின்னா” என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். நபி(ஸல்) அவர்கள் முசின்னா’வை குர்பானி கொடுக்கவே வலியுறுத்தியுள்ளார்கள். குறைவின் காரணமாக ஒருவருக்கு கொடுப்பதற்கு சிரமமாக இருந்தால், அவர் “ஜத்அ” ஆறு மாதத்தை பூர்த்தி செய்த செம்மறி ஆட்டை அறுப்பதற்கு அனுமதியுள்ளது. 

குறிப்பு: இந்த விதிவிலக்கு செம்மறி ஆட்டிற்கு மட்டுமே மற்றவற்றிற்கு இல்லை.


குர்பானி கொடுக்கவிருக்கும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்

வினாடி வினா 

குர்பானி கொடுக்கவிருக்கும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் என்ன?


விடை: குர்பானியை நிறைவேற்றும் வரை அவர்களது முடி, நகம் ஆகியவற்றை நீக்கக்கூடாது


ஆதாரம்:

உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க விரும்பி துல்ஹஜ் (முதல்) பிறையை கண்டால், குர்பானியை நிறைவேற்றும் வரை (அவர்) தனது முடி, நகம் ஆகியவற்றை நீக்க வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உம்மு ஸலமா(ரலி), நூல்: முஸ்லிம் 5234)

குறிப்பு: ஒருவர் துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் இடையில் குர்பானிக்கான நிய்யத் (எண்ணம்) செய்திருந்தால், அவர் அந்த நேரத்திலிருந்து குர்பானியை நிறைவேற்றும் வரை தனது முடி, நகம் ஆகியவற்றை நீக்கக்கூடாது. குர்பானி கொடுப்பவர் மட்டுமே தனது முடி நகம் ஆகியவற்றை நீக்கக்கூடாது. அவரின் குடும்பத்தினர் இதனை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை.


யார் யார் குர்பானி கொடுப்பது சுன்னாவாகும்?

வினாடி வினா 

குர்பானி கொடுப்பது மிகவும் வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். யார் யார் குர்பானி கொடுப்பது சுன்னாவாகும்?


விடை: 

  1. முஸ்லிமாக இருக்க வேண்டும்.
  2. பருவ வயதை அடைந்தவராகவும் 
  3. புத்தி சுவாதீனமுள்ளவராகவும் இருக்க வேண்டும். 
  4. வசதி இருக்க வேண்டும். அதாவது ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் தஷ்ரீக்குடைய மூன்று நாள்களில் தன்னுடைய தேவைக்கும் மற்றும் தான் எவர்களுக்கு வாழ்வாதாரம் கொடுப்பது கடமையோ அவர்களுடைய தேவைக்கும் அதிகமாக செல்வம் யாரிடம் இருக்குமோ அவர் குர்பானி கொடுக்க வேண்டும்

("உழ்ஹிய்யா" என்ற புத்தகத்திலிருந்து மேற்கோள் எடுக்கப்பட்டுள்ளது, மொழிபெயர்த்தவர்: உமர் ஷரிஃப் இப்னு அப்துஸ் ஸலாம்  - தாருல் ஹுதா பதிப்பகம்)

ஒரு குடும்பத்துக்கு ஓர் ஆடு குர்பானி கொடுத்தால் போதுமானது. வசதியுள்ளவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை குர்பான் கொடுக்கலாம்.


👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼👆🏼

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார் என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர்: அஃதா பின் யஸார்(ரஹி), நூல்: திர்மிதி 1587 - ஸஹீஹ்)

குறிப்பு: ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆடுகளை குர்பானி கொடுப்பதற்கு அனுமதியுள்ளது.





துல்-ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகள்

வினாடி வினா

துல்-ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகள் என்ன?


விடை: 

இந்த பத்து நாட்களில் தான் தொழுகை, நோன்பு, ஹஜ் ஸதஃகா போன்ற வணக்கங்கள் அனைத்தும் ஒன்றாக நிறைவேற்றப்படுகின்றன. மற்ற மாதங்களில் இவை அனைத்தும் ஒன்றாக நிறைவேற்றப்படுவது இல்லை. இதுவே இந்த பத்து நாட்களின் சிறப்பிற்குரிய காரணமாகும் என்று இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி தனது (புகாரியின் விளக்கவுரையான) ஃபத்ஹுபாரியில் (2/460) குறிப்பிட்டுள்ளார்கள்

மேலும், இம்மாதத்தில் செய்யும் நல்லறங்கள் பெரிதும் அங்கீகரிக்கப்படுகின்றன.


ஆதாரம்: 

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

'(துல்ஹஜ்) பத்து நாள்களில் செய்யும் எந்த நல்லறமும் அய்யாமுத் தஷ்ரீக் நாள்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விடச் சிறந்ததல்ல' என்று நபி(ஸல்) கூறினார்கள். 'ஜிஹாதை விடவுமா?' என்று நபித் தோழர்கள் கேட்டனர். 'தன்உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி(ஸல்) கூறினார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 969. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)




மறுமையின் முதற்படி

வினாடி வினா 


________  மறுமையின் முதற்படியாகும். அதில் வென்றால் அதற்குப் பின்னாலுள்ளது மிக இலகுவானது. அதில் வெல்லவில்லை என்றால் அதற்குப்பின்னாலுள்ளது மிகவும் கடினமானது.

  1. ஈமான் 
  2. கலிமாவை வாயால் மொழிவது
  3. கப்ர்
  4. பாவமன்னிப்பு

விடை: கப்ர் 

ஆதாரம்:
உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கப்ருக்குப் பக்கத்தில் நின்றால் தன் தாடி நனையும் அளவுக்கு அழக் கூடியவர்களாக இருந்தார்கள். சுவர்க்கம், நரகத்தை நினைத்தா அழுகின்றீர் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் இல்லை என்றார். இன்னதுக்காகவா அழுகின்றீர் எனக் கேட்கப்பட்டது. அதற்கவர் ‘கப்ர் மறுமையின் முதற்படியாகும் அதில் வென்றால் அதற்குப் பின்னாலுள்ளது மிக இலகுவானது. அதில் வெல்லவில்லை என்றால் அதற்குப்பின்னாலுள்ளது மிகவும் கடினமானது. நான் எந்த மோசமான காட்சியைக் கண்டாலும் கப்ர் எனக்கு அதை விடக் கடினமாகவே தெரிகிறது’ என நபியவர்கள் கூறினார்கள் அதை நினைத்துத்தான் அழுகிறேன் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஹானி
ஆதாரம்: அஹ்மத் 454

நபி(ஸல்) அவர்களின் மரணத்தருவாயில்...

வினாடி வினா 

நபி(ஸல்) அவர்கள் தனது மரணத்தருவாயில், அவருடைய மகள் ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் இரண்டு முறை இரகசியமாகப் பேசினார்கள். முதலில் பேசியதற்கு ஃபாத்திமா(ரலி) அழுதார்கள். இரண்டாவது முறை ஃபாத்திமா(ரலி) சிரித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இரு முறையும் அப்படி என்ன சொன்னார்கள்?


விடை: 

'நபி(ஸல்) அவர்கள் இரகசியமாகப் பேசியபோது, தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனால் ஃபாத்திமா(ரலி) அழுதார்கள். பிறகு இரண்டாம் முறை இரகசியமாகப் பேசியபோது, அவர்களின் குடும்பத்தாரில் அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லப் போகும் முதல் ஆள் நீ (ஃபாத்திமா(ரலி)) என்று கூறினார்கள். அதனால் ஃபாத்திமா(ரலி) சிரித்தார்கள்.


ஆதாரம்:

அதற்கு ஃபாத்திமா, 'நபி(ஸல்) அவர்கள் (முதல் முறை) என்னிடம் இரகசியமாகப் பேசியபோது, தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனால் நான் அழுதேன். பிறகு (இரண்டாம் முறை) இரகசியமாகப் பேசியபோது அவர்களின் குடும்பத்தாரில் நானே அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லப் போகும் முதல் ஆள் என்று கூறினார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியோடு) சிரித்தேன்' என்று பதிலளித்தார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 3716. , அத்தியாயம்: 4. உளூச் செய்வது)


குர்ஆனில் மிகவும் மகத்தான வசனம்

வினாடி வினா 

அல் குர்ஆனில் மிகவும் மகத்தான வசனம் என்றால் அது என்ன?


விடை: அல்லாஹு லாயிலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்... எனத் தொடங்கும் (2:255 ஆவது) வசனம் 


ஆதாரம்:

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அபுல்முன்திர், இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?" எனக் கேட்டார்கள். நான் "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று கூறினேன். அவர்கள் "அபுல்முன்திர், இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?" என (மீண்டும்) கேட்டார்கள். நான் "அல்லாஹு லாயிலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்... எனத் தொடங்கும் (2:255 ஆவது) வசனம்" என்று விடையளித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் (ஓர் அடி) அடித்துவிட்டு "அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (வாழ்த்துகள்), அபுல்முன்திரே!" என்றார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 1476., அத்தியாயம்: 6. பயனிகள் தொழுகையும் சுருக்கத் தொழுகையும்)


பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது

வினாடி வினா 

பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது எது?

  1. நல்ல மனைவி
  2. நல்ல அமல்கள்
  3. நல்ல கணவர்
  4. சாலிஹான பிள்ளைகள்

விடை: 1. நல்ல மனைவி

ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்: 2911., அத்தியாயம்: 17. பால்குடி (சட்டம்))

யாசகம் கேட்பதை விட எது சிறந்தது?

வினாடி வினா 

யாசகம் கேட்பதை விட எது சிறந்தது என நபி(ஸல்) கூறினார்கள்? 


விடை: 

ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும்


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்.' 

ஸுபைர் இப்னுல் அவ்வாம்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 1471. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


ஒவ்வொரு நாளும் எளிமையான முறையில் ஆயிரம் நன்மைகள்

வினாடி வினா 

நாம் எவ்வாறு ஒவ்வொரு நாளும் எளிமையான முறையில் ஆயிரம் நன்மைகளை பெற முடியும்?


விடை: ஒவ்வொரு நாளும் நூறு "சுப்ஹானல்லாஹ்" என்று துதிப்பது


ஆதாரம்:

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், "உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?" என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், "எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?" என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை ("சுப்ஹானல்லாஹ்" என்று கூறித்) துதிக்க, அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன" என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 5230., அத்தியாயம்: 48. பிரார்த்தனைகள்)


பெண்களுக்கு சிறந்த ஜிஹாத்

வினாடி வினா 

எது பெண்களுக்கு சிறந்த ஜிஹாத் என நபி(ஸல்) கூறியுள்ளார்கள்?

  1. ஹிஜாப் அணிவது
  2. கணவனின் உடைமைகளை பேணி காப்பது
  3. ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ் செய்வது
  4. ஒழுக்கமான முறையில் பிள்ளைகளை வளர்ப்பது

விடை: 3. ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ் செய்வது

ஆதாரம்
ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
'இறைத்தூதர் அவர்களே! இறைவழியில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(அவ்வாறு) இல்லை. எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்' என்றார்கள். 
(ஸஹீஹுல் புகாரி: 1520. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)

ஒவ்வோர் இரவிலும் படுக்கைக்கு செல்வதற்கு முன்...

வினாடி வினா 

நபி(ஸல்) அவர்கள் ஒவ்வோர் இரவிலும் படுக்கைக்கு செல்வதற்கு முன் என்ன செய்வார்கள்?


விடை: 

தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் 'குல் ஹுவல்லாஹு அஹத்', 'குல் அஊது பிரப்பில் ஃபலக்', ' குல் அஊது பிரப்பின்னாஸ்' ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.


ஆதாரம்:

ஆயிஷா(ரலி) அறிவித்தார் 

நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் 'குல் ஹுவல்லாஹு அஹத்', 'குல் அஊது பிரப்பில் ஃபலக்', ' குல் அஊது பிரப்பின்னாஸ்' ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 5017. , அத்தியாயம்: 5. குளித்தல்)



"மூக்கு மண்ணைக் கவ்வட்டும்”

வினாடி வினா 

யாரின் "மூக்கு மண்ணைக் கவ்வட்டும்” என்று நபி (ஸல்) மூன்று முறை கூறினார்?


விடை: தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத் தான்) 


ஆதாரம்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், "மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்" என்று கூறினார்கள். "யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத் தான்)" என்று பதிலளித்தார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 4987., அத்தியாயம்: 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும் )


பாவங்களிலிருந்து காக்கும் கேடயம்

வினாடி வினா 

எந்த அமல் பாவங்களிலிருந்து காக்கும் கேடயமாக கருதப்படுகிறது?

  1. தொழுகை
  2. நோன்பு
  3. ஜகாத்
  4. பெற்றோருக்கு பணிவிடை செய்தல்

விடை: நோன்பு

ஆதாரம்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஆதமின் மைந்தனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு செயலும் அவனுக்கே உரியதாகும்; நோன்பைத் தவிர! நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குவேன்" என வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் அருவருப்பாக (ஆபாசமாக)ப் பேசவேண்டாம்; கூச்சலிட்டு சச்சரவு செய்யவேண்டாம். யாரேனும் அவரை ஏசினால் அல்லது வம்புக்கிழுத்தால் "நான் நோன்பு நோற்றிருக்கிறேன்" என்று அவர் கூறிவிடட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, மறுமை நாளில் அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது, நோன்பு துறப்பதை முன்னிட்டு அவர் மகிழ்ச்சியடைகிறார். தம் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவர் மகிழ்ச்சியடைகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்: 2118., அத்தியாயம்: 13. நோன்பு)


ஒரு பெண் மணமுடிக்கப்படுகிற நான்கு நோக்கங்கள்

 வினாடி வினா

நான்கு (நோக்கங்களு)க்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். அவை யாவை?


விடை:

  1. அவளது செல்வத்திற்காக. 
  2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 
  3. அவளது அழகிற்காக. 
  4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. 


ஆதாரம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு (நோக்கங்களு)க்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

1. அவளது செல்வத்திற்காக. 

2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 

3. அவளது அழகிற்காக. 

4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. 

ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து)கொண்டு வெற்றி அடைந்துகொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 2905., அத்தியாயம்: 17. பால்குடி (சட்டம்))


பண்புகளில் சிறந்தது

வினாடி வினா

பண்புகளில் சிறந்தது எது?


விடை: உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதுமாகும்


ஆதாரம்:

'ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீர் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 28. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


திங்கள் வியாழன் நோன்பு

வினாடி வினா 

நபி(ஸல்) அவர்கள் ஏன் திங்கள் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்?


விடை: ஒவ்வொரு வியாழன் மற்றும், திங்கட்கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நபி(ஸல்) நோன்பு நோற்றுள்ள நிலையில் தனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை அவர் விரும்பினார்.


ஆதாரம்:

நபி(ஸல்) அவர்கள் திங்கள் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள். மேலும் “ஒவ்வொரு வியாழன் மற்றும், திங்கட்கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அபுஹூரைரா(ரலி) அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா


இந்த உலகம், இன்னும் அதில் உள்ளவை அனைத்தை விடவும் மிகச் சிறந்தவை

வினாடி வினா 

எந்த தொழுகை தொழுவது இந்த உலகம் இன்னும் அதில் உள்ளவை அனைத்தை விடவும் மிகச் சிறந்தவையாகும்?


விடை: பஜ்ருடைய சுன்னத் இரண்டு ரக்அத்துகள்


அதாரம்: 

ஆயிஷா(ரலி) அறிவித்தார்:

நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.

(ஸஹீஹுல் புகாரி: 1169. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)

“பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகள் இந்த உலகம் இன்னும் அதில் உள்ளவை அனைத்தை விடவும் மிகச் சிறந்தவையாகும்” என்று நபி(ஸல்)   அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : அயிஷா[ரலி] நூல் : முஸ்லிம்


அல்லாஹ்வையன்றி (மற்றவற்றைத் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களுக்கு உதாரணம்

வினாடி வினா 

அல்லாஹ்வையன்றி (மற்றவற்றைத் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களுக்கு அல்லாஹ் எதை உதாரணம் கூறுகிறான்?


விடை: நூலாம் பூச்சியின் (spider) வீடு 


ஆதாரம்:

அல்லாஹ்வையன்றி (மற்றவற்றைத் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களின் உதாரணம்: நூலாம் பூச்சி கட்டிய வீட்டை(த் தாங்கள் வசிக்க எடுத்துக் கொண்டவர்களின் உதாரணத்தை) ஒத்திருக்கிறது. வீடுகளில் எல்லாம் மிக்க பலவீனமானது நிச்சயமாக நூலாம் பூச்சியின் வீடுதான். (நூலாம் பூச்சியின் வீடு இவர்களை எவ்வாறு பாதுகாக்க முடியாதோ அவ்வாறே இவர்கள் தங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்ட தெய்வங்களும் இவர்களை பாதுகாக்க முடியாது. இதை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே! (29:41)


மரணத்தை தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது

வினாடி வினா 


_______ மரணத்தை தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது.

1. தேனில் 

2. பேரிச்சைப்பழத்தில் 

3. ஜம்ஜம் தண்ணீரில் 

4. கருஞ்சீரகத்தில்


விடை: 4. கருஞ்சீரகத்தில்


ஆதாரம்:

காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்:  

எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். 

அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்கள். நான், 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 5687. , அத்தியாயம்: 6. மாதவிடாய்) 


நெருப்பு விறகை அழித்து விடுவதைப் போல் நன்மையை அழித்து விடுகிறச் செயல்

 வினாடி வினா 

எந்த செயல் நெருப்பு விறகை அழித்து விடுவதைப் போல் நன்மையை அழித்து விடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினாகள்?

1. பொய் சொல்வது

2. புறம் பேசுவது

3. பொறாமைக் கொள்வது

4. ஷிர்க் வைப்பது


விடை: 3. பொறாமைக் கொள்வது


ஆதாரம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொறமை கொள்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்பதைப் போன்று பொறாமை நன்மையைத் தின்று (அழித்து) விடும்.

(அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி) அபூதாவூத் 4257)


மறுமை நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான்

வினாடி வினா

தன்னுடைய அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு அல்லாஹ் நிழல் அளிப்பான். அவர்கள் யாவர்?


விடை: 

  1. நீதிமிக்க ஆட்சியாளர். 
  2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 
  3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில்) கண்ணீர் சிந்திய மனிதன். 
  4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 
  5. இறைவழியில் நட்புகொண்ட இருவர். 
  6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்' என்று கூறியவர். 
  7. தம் இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.


ஆதாரம்: 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்: நீதிமிக்க அரசன். அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன். பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன். அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர், அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்' எனக் கூறியவன். தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன், தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர். 

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 1423. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


வானங்களையும் பூமியையும் அல்லாஹ் எத்தனை நாளில் படைத்தான்?

 வினாடி வினா

அல்லாஹ் தான் வானங்களையும் பூமியையும் ___ நாட்களில் படைத்தான்.

1. 1

2. 6

3. 7

4. 10


விடை: 2. 6


ஆதாரம்: 

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்...." (7:54)


சுவாரஸ்யமான தகவல் 👇🏼


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டு, "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை)ப் படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். துன்பத்தை செவ்வாய் கிழமையன்றும் ஒளியை புதன்கிழமையன்றும் படைத்தான். வியாழக்கிழமையன்று உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக்குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்" என்று கூறினார்கள்.

- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 5379., அத்தியாயம்: 50. நயவஞ்சகத் தன்மைகளும் அதற்குரிய தண்டனைகளும்)


அல்லாஹ்வின் அன்பு

வினாடி வினா

அல்லாஹ் அன்பை __’ஆக பங்கிட்டான். ____ ‘ஐ பூமியில் இறக்கினான். 

1. 100, 1

2. 100, 99

3. 100, 100

4. 99, 1


விடை: 1. 100, 1


ஆதாரம்:

அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியை விட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6000 அபூஹுரைரா ( ரலி). 


ஹஜ்ஜுக்கு அல்லது உம்ரா செய்ய செல்வோரிடம் நபி(ஸல்) அவர்களுக்குச் ஸலாம் சொல்லி அனுப்புவது சரியான வழிமுறையா?

வினாடி வினா

பொதுவாக ஹஜ்ஜுக்கு அல்லது உம்ரா செய்ய செல்வோரிடம், நாம் நபி(ஸல்) அவர்களுக்குச் ஸலாம் சொல்லி அனுப்புகிறோம். இது நபியின் வழிமுறையா?


விடை:  

ஹஜ்ஜுக்கு அல்லது உம்ராவுக்கு செல்வோரிடம் தனக்காக அங்கே துஆ செய்யும்படி சொல்ல ஆதாரம் உண்டு! நபி(ஸல்) அவர்களே உமர்(ரலி) அவர்கள் உம்ராவுக்குச் சென்றபோது தனக்காக துஆ செய்யும்படி கேட்டுள்ளார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு ஸஹாபாக்கள் ஸலாம் சொல்லிவிட்டதாக எந்த ஆதாரமும் இல்லை.


ஆதாரம்:

நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள் ‘நிச்சயமாக மலக்குகள் பறந்து கொண்டிருக்கின்றனர்; எனது உம்மத்தினரின் ஸலாத்தை அவர்கள் எனக்கு எத்திவைப்பர்.’ நஸாயீலே(1282) பதியப்பட்ட நம்பகமான ஹதீஸாகும்.

அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் மற்றும் ஒரு அறிவிப்பில் ‘ எனது கப்ரை பெருநாள் (கொண்டாடும் இடம்) போன்று ஆக்கி விடாதீர்கள். என் மீது ஸலவாத்து சொல்லுங்கள் உங்கள் ஸலவாத்து நீங்கள் எங்கிருந்த போதிலும் என்னை வந்தடையும்.’ (அபூதாவூத் 2042.)

ஆகவே, எங்கு இருந்த போதிலும் நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் அதிகம் ஸலவாத்தும், ஸலாமும் கூறுவோம். நமது ஸலவாத்து நாம் எங்கிருந்த போதிலும் அது மலக்குகளின் மூலமாக நபியவர்களுக்கு எத்திவைக்கப்படும்.


நல்ல நண்பனும் கெட்ட நண்பனும்

வினாடி வினா

நல்ல நண்பனுக்கும் கெட்ட நண்பனுக்கும் எதை நபி(ஸல்) உவமையாக கூறினார்கள்?


விடை: நல்ல நண்பனுக்கு கஸ்தூரி வியாபாரியையும் கெட்ட நண்பனுகு உலை ஊதுபவனையும் நபி(ஸல்) உவமையாக கூறினார்கள்.


ஆதாரம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது, கஸ்தூரி வியாபாரியின் நிலையையும், (உலைக்களத்தில்) உலை ஊதுகின்றவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரி வியாபாரி, ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக்கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால், உலை ஊதுபவனோ, ஒன்று உனது ஆடையை எரித்துக் கரித்து விடுவான்;அல்லது (அவனிடமிருந்து) துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்.

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 5124., அத்தியாயம்: 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும் )


மூன்று வகையான மனிதர்களுக்கு எதிராக அல்லாஹ் வாதாடுவான்.

வினாடி வினா

மறுமையில் அல்லாஹ் மூன்று வகையான மனிதர்களுக்கு எதிராக தானே வாதாடுவான். அவர்கள் யாவர்?


விடை: 

1. அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்.

2. சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்.

3. ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்' என்று அல்லாஹ் கூறினான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 2227. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!' என்று அல்லாஹ் கூறினான்.' 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 2270. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


தற்பெருமை

வினாடி வினா

தற்பெருமை கொள்வோரின் குணங்கள் யாவை?


விடை: உண்மையை மறுப்பது மக்களை இழிவாகக் கருதுவதும் தற்பெருமை கொள்வோரின் குணங்களாக இருக்கும்.


ஆதாரம்:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்" என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 147., அத்தியாயம்: 1. இறைநம்பிக்கை)

குர்ஆனின் மீது சத்தியம் செய்யலாமா?

வினாடி வினா

நாம் அல்லாஹ்வின் மீதும் குர்ஆனின் மீது மட்டுமே சத்தியம் செய்யலாம். வேறு யார் மீதும்; எந்த படைப்பினங்கள் மீதும் சத்தியம் செய்ய கூடாது.

1. சரி

2. தவறு


விடை: தவறு


ஆதாரம்:

 “சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 2679)

மேலும் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

 “சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்” என்று கூறினார்கள். (புகாரி 3836)

மேலும் “ஒரு யூதன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முஸ்லிமாகிய நீங்களும் இணை கற்ப்பிக்கிறீர்கள், கஃபாவின் மீது ஆணையாக என்று கூறுகிறீர்கள் எனக் கேட்டார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்கள் இனிமேல் சத்தியம் செய்வதாக இருந்தால் (கஃபாவின் மீது என்று கூறாமல்) கஃபாவின் இறைவன் மீது என்று கூற வேண்டும் என்று கூறினார்கள். (அஹ்மத், நஸாஈ)

மேலும் ”ஒரு மனிதர் கஃபாவின் இறைவன் மீது என்று கூறி சத்தியம் செய்ததை இப்னு உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். உடனே அல்லாஹ்

அல்லாததின் மீது சத்தியம் செய்யக கூடாது என்று கூறினார்கள். யார் அல்லாஹ் அல்லாதவை மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணைகற்பித்து விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி) 


அல்லாஹ் அல்லாததின் மீது சத்தியம் செய்திருந்தால் என்ன செய்ய வேண்டும்? 

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

யார் சத்தியம் செய்யும்போது ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், ‘வா சூது விளையாடுவோம்’ என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 4860)

அல்லாஹ் அல்லாததின் மீது சத்தியம் செய்தால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகிறார். அதனால் தான் மீண்டும் கலிமா சொல்ல வேண்டும் என்று ஹதீஸ் சொல்லித் தருகிறது. எனவே சத்தியம் செய்யும் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


 

புறம் பேசுதல்

வினாடி வினா

புறம் பேசுதல் என்றால் என்ன? இட்டுக் கட்டாமல் உள்ளதை பேசினாலும் குற்றமாகுமா?


விடை: உள்ளதாக இருப்பினும் உங்களுடைய சகோதரர் வெறுக்கின்றவற்றைக் கூறுதலே புறம் பேசுதல் ஆகும்.


ஆதாரம்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்"  என்று பதிலளித்தார்கள். அப்போது, "நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்"  என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 5048., அத்தியாயம்: 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும் )


ஷைத்தானின் சகோதரர்கள்

வினாடி வினா

ஷைத்தானின் சகோதரர்கள் என்று யாரை அல்லாஹ் குறிப்பிடுகிறான்?

1. அல்லாஹ்வுக்கு இணை வைப்போரை

2. நயவஞ்சகர்களை

3. விரயம் செய்பவர்களை

4. கஞ்சத்தனம் செய்வோரை


விடை: 3. விரயம் செய்பவர்களை


ஆதாரம்:

ஏனென்றால், மிதமிஞ்சி செலவு செய்பவர்கள் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இறைவனுக்குக்கூட நன்றி செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கிறான். (17:27)


பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்கள்

வினாடி வினா

பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்கள் எவையென்று நபி(ஸல்) அறிவித்திருந்தார்கள்?


விடை: அல்லாஹ்விற்கு இணைவைத்தல், தாய் தந்தையரை நோவினை செய்தல் மற்றும் பொய் சாட்சியம் சொல்லுதல்.

 

ஆதாரம்:

அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். 

(ஒரு முறை) 'பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று நபி(ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், 'ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)' என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)' என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, 'அறிந்து கொள்ளுங்கள்; பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்) தான்' என்று கூறினார்கள். 'நிறுத்திக் கொள்ளக் கூடாதா' என்று நாங்கள் சொல்கிற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 2654. , அத்தியாயம்: 3. கல்வியின் சிறப்பு)


வேதங்கள்

வினாடி வினா

திருக்குர்ஆனில், அல்லாஹ் மக்களுக்காக அருளிய எத்தனை வேதங்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது? அவை யாவை? அவை ஒவ்வொன்றும் யாருக்காக அருளப்பட்டது?


விடை: ஸபூர், தவ்றாத், இன்ஜில் & குர்ஆன்


ஆதாரம்:

1. ஸபூர்  :    தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது (4:163)

2. தவ்றாத்  :    மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (5:44)

3. இன்ஜில்  :    ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (5:46)

4. திருக்குர்ஆன் : முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது (6:19)

குறிப்பு: இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு அருளப்பட்டது ஸுஹ்ஃப் வகையில் சேர்ந்ததாகும்.


நாம் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?

வினாடி வினா

மக்களில் நன்மை செய்வதற்கும் மற்றும் நல்லுறவு கொள்வதற்கும் மிகத் தகுதியானவர்கள் யார்?


விடை:  தாய் பின்பு தந்தை


ஆதாரம்:

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் 

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள். 

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

(ஸஹீஹுல் புகாரி: 5971. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)



நம்பிக்கைக் கொண்ட பெண்கள்

வினாடி வினா

நம்பிக்கைக் கொண்ட பெண்களுக்கு அல்லாஹ் யாரை உதாரணம் கூறுகிறான்?


விடை: ஃபிர்அவ்னுடைய மனைவி (ஆசியா) மற்றும் இம்ரானுடைய மகள் மர்யம்.


ஆதாரம்: 

நம்பிக்கைகொண்ட பெண்களுக்கு(ம் இரு பெண்களை) அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். (முதலாவது:) ஃபிர்அவ்னுடைய மனைவி (ஆசியா). அவள் (தன் இறைவனிடம்) ‘‘என் இறைவனே! உன்னிடத்தில் உள்ள சொர்க்கத்தில் எனக்கு ஒரு வீட்டை அமைத்துத் தா, ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னை பாதுகாத்துக் கொள், அநியாயக்கார சமுதாயத்தை விட்டும் என்னை பாதுகாத்துக்கொள்'' என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தாள். (இரண்டாவது:) இம்ரானுடைய மகள் மர்யம். அவள் தன் கற்பை பாதுகாத்துக் கொண்டாள். ஆகவே, அவளுடைய கர்ப்பத்தில் நம் ரூஹிலிருந்து ஊதினோம். அவள் தன் இறைவனின் வசனங்களையும், வேதங்களையும் உண்மையாக்கி வைத்ததுடன் (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவளாகவும் இருந்தாள். (6:11-12)




நம்மால் அநீதியிழைக்கப்பட்டவரின் சாபம்

வினாடி வினா

நம்மால் அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு ஏன் அஞ்ச வேண்டும்?


விடை: அநீதியிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை. ஆகவே, அவரின் பிரார்த்தனை அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும். 


ஆதாரம்:

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை' என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 2448. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


பாகப் பிரிவினை

வினாடி வினா

இப்ராஹிமுடைய தந்தை காலமாகிவிட்டார். அவருடைய தந்தை மரண சாசணம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவருக்கு யாரிடனும் கடனும் இல்லை. சில நாட்கள் கழித்து, அல்லாஹ் நிர்ணயித்த வண்ணம் சொத்து அவருடைய குடும்பத்தினருக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது. அப்போது, அக்குடும்பத்தில் சொத்து பிரிக்கப்படுகிறது என்று அறிந்த; அந்த குடும்பத்திற்கு தொடர்பே இல்லாத நபர் ஒருவர் அங்கு வந்து தனக்கும் ஏதாவது தருமாறு கேட்கிறார். இப்ராஹிமுடைய குடும்பத்தார் என்ன செய்ய வேண்டும்? 

1. இன்னொரு நாள் வர சொல்லி அவரை அனுப்பி விட வேண்டும்

2. முக்கியமான நேரத்தில் வந்து இடையூறு செய்வதற்காக அவரை ஏச வேண்டும்

3. மேற்குறிப்பிட்ட எதுவுமில்லை


விடை: 3. மேற்குறிப்பிட்ட எதுவுமில்லை


ஆதாரம்:

(பாகப்) பிரிவினை செய்துகொள்ளும் இடத்திற்கு (பங்குதாரல்லாத) உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுத்து, அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் (கொண்டு ஆறுதல்) கூறி (அனுப்பி)விடுங்கள். (4:8) 


நயவஞ்சகனின் அடையாளங்கள்

வினாடி வினா

நயவஞ்சகனின்(hypocrites) அடையாளங்கள் என்ன?


விடை: பேசும்போது பொய் பேசுவான், மோசடி செய்வான் மற்றும் வாக்களித்தால் மாறு செய்வான். 


ஆதாரம்: 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும்: அவன் பேசும்போது பொய் பேசுவான். அவனிடம் ஒரு பொருள் (அல்லது பணி) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வான். அவன் வாக்களித்தால் மாறு செய்வான். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 2682. , அத்தியாயம்: 3. கல்வியின் சிறப்பு)


முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பணி

வினாடி வினா

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நிர்ணயித்த பணி - மக்களை நல்லவற்றின் பக்கம் அழைத்து, தீமைகளிலிருந்து தடுத்து, அவர்களை திருந்தச் செய்வதாகும். 

1. சரி

2. தவறு


விடை: 2. தவறு. தூதை தெரிவிப்பதுதான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நிர்ணயித்த பணியாகும் - மக்களை திருந்தச் செய்வது அல்ல.


ஆதாரம்: 

(நபியே!) இதற்குப் பின்னும் அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வு(டைய கட்டளைகளு)க்கு முற்றிலும் தலை சாய்த்துவிட்டோம் என்று கூறி வேதமளிக்கப்பட்டவர்களையும், (சிலையை வணங்கும்) பாமரர்களையும் நோக்கி ‘‘நீங்களும் (அவ்வாறே) அல்லாஹ்வுக்குத் தலை சாய்க்கிறீர்களா?'' என்று கேட்பீராக. (அவ்வாறே) அவர்களும் தலைசாய்த்தால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள். அவர்கள் புறக்கணித்து விட்டால் (அதற்காக நீர் கவலைப்படாதீர். நம் தூதை அவர்களுக்குத்) தெரிவிப்பதுதான் உம் மீது கடமையாக இருக்கிறது. அல்லாஹ் (தன்) அடியார்களை உற்று நோக்குகிறான். (3:20)

சம காலத்தை ஒப்பிடும்போதும், மார்க்க போதகர்கள் இதையே மனதில் கொண்டு பிரச்சாரம் செய்ய வேண்டும். அல்லாஹ் நாடியவர்களையே அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆகையால், குர்ஆன்/ஹதீஸ் அடிப்படையில் யாரேனும் நன்மையை ஏவி, தீமையை தடுக்க எண்ணி இருந்தும், போதனை செய்யப்பட்டவர்கள் செவிசாய்க்காது தனது மன இச்சைகளையே பின்பற்றினால், அதனால் அல்லாஹ் அவர்களை(நன்மையை ஏவி, தீமையை தடுத்தவர்ளை) குற்றம் பிடிக்க மாட்டான். 

ஆகையால், மார்க்க ரீதியில் ஒரு தவறிழைக்கப்படுமாயின், அதன் பற்றிய தெளிவு உங்களிடம் இருந்தால், அல்லாஹ்வின் பொறுத்ததை நாடி தெரியாதவர்களுக்கு எடுத்து கூறுங்கள். அவர்கள் உங்களை புறக்கணித்து விட்டாலும் கவலைப்படாதீர்கள். எடுத்து சொல்வது மட்டுமே நமது கடமையாகும்.


உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது?

வினாடி வினா

உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்?


விடை: அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.


ஆதாரம்:

மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாக நிம்மதி அடையும் என்பதை (நபியே!) அறிந்துகொள்வீராக (13:28)




ஒரு ஷஹீதுடைய எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுமா?

வினாடி வினா

ஒரு ஷஹீதுடைய(உயிர்த்தியாகி) எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும்; ___________ தவிர.

1. விபச்சாரத்தை

2. கொலையை

3. கடனை

4. மேற்குறிப்பிட்ட எதுவுமில்லை


விடை: 3. கடன்


ஆதாரம்:

“ஷஹீதின் (உயிர்த்தியாகி) அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன; கடனைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

[அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)]


நூல்: அஹ்மத் 6874