வினாடி வினா
குர்பானி கொடுக்கப்படும் பிராணிகளின் தன்மைகள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்?
விடை:
குர்பானி பிராணிகள் ஆரோக்கியமானதாகவும் எந்தக் குறையும் இல்லாததாகவும் இருத்தல் வேண்டும்.
ஆதாரம்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், 1. வெளிப்படையாக தெரியும் குருடு; 2. வெளிப்படையாக தெரியும் நோய்; 3. வெளிப்படையாக தெரியும் நொண்டி; 4. எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடைய பிராணிகளை குர்பானி கொடுக்கக்கூடாது.
(பராஉ பின் ஆஸிப்(ரலி), நூல்: அபூதாவூத் 2804 - ஸஹீஹ்)
இந்த ஹதீஸில் உள்ள “தெளிவாகத் தெரியக்கூடிய” என்ற வாசகம், குறை சிறியதாகவோ மறைமுகமாகவோ இருந்தால், அந்த பிராணிகளை குர்பானி கொடுப்பதில் குற்றமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக