புதன், 30 செப்டம்பர், 2020

மறைமுகமாக செய்யும் தர்மத்துக்கு மட்டுமா நன்மை கிடைக்கும்?

வினாடி வினா

மறைமுகமாக தர்மம் செய்தால் மட்டுமே அது நமக்கு நன்மை பயக்கும். 

1. சரி

2. தவறு


விடை: தவறு


ஆதாரம்: 

(நீங்கள் செய்யும்) தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால் அதுவும் நன்றே. (ஏனெனில், அது பிறரையும் தர்மம் செய்யும்படி தூண்டும்.) ஆயினும், அதை நீங்கள் மறைத்தே கொடுப்பது, அதுவும் அதை ஏழைகளுக்குக் கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்மை (பயக்கும்). மேலும், அது (அதாவது இருவகை தர்மமும்) உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஆகும். நீங்கள் செய்யும் (வெளிப்படையான மற்றும்) மறைவான அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான். (2:271)

(நம்பிக்கையாளர்களே!) எவர்கள் தங்கள் பொருள்களை (பிறருக்கு உதவிடும் நோக்கில்) இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு.  தவிர, அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (2:274)  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக