வியாழன், 1 அக்டோபர், 2020

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான முதல் மூன்று செயல்கள்

வினாடி வினா 

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான முதல் மூன்று செயல்கள் எனென்ன?


விடை: 1. தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது, 2. பெற்றோருக்கு நன்மை செய்வது, 3. இறைவழியில் அறப்போர் புரிவது. 


ஆதாரம்:

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, 'தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்' என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'பெற்றோருக்கு நன்மை செய்தல்' என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'இறைவழியில் அறப்போர் புரிதல்' என்றார்கள். எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 527. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


👆🏼👆🏼👆🏼

உபரியான வணக்கங்களை விட பெற்றோருக்கு நன்மை செய்தலே அல்லாஹ் விரும்புகிறான் என்பதை இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக