ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

பிப்ரவரி 2021 மாதாந்திர கேள்விகள்

தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் _____ நாள்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும்

வினாடி வினா

தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் _____  நாள்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1. 4

2. 40

3. 400


விடை: 2. 40

ஆதாரம்:

புஸ்ரு இப்னு ஸயீத் அறிவித்தார். 

தொழுபவரின் குறுக்கே செல்பவர் பற்றி நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதை அறிந்து வருமாறு என்னை அபூ ஜுஹைம்(ரலி) அவர்களிடம் ஸைத் இப்னு காலித்(ரலி) அனுப்பு வைத்தார். 'தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது நாள்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஜுஹைம்(ரலி) விடையளித்தார்கள். 

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுன் னழ்ரு என்பவர் 'நாற்பது ஆண்டுகள்' என்று கூறினார்களா? அல்லது 'நாற்பது மாதங்கள்' அல்லது 'நாற்பது நாள்கள்' என்று கூறினார்களா? என்பது சரியாக தமக்கு நினைவில்லை என்கிறார்.

(ஸஹீஹுல் புகாரி: 510. , அத்தியாயம்: 8. தொழுகை) 


“அநாதைகளைக் கடுகடுக்காதீர். ____ வெருட்டாதீர்.” என அல்லாஹ் கூறுகிறான்.

வினாடி வினா

“அநாதைகளைக் கடுகடுக்காதீர். ____ வெருட்டாதீர்.” என அல்லாஹ் கூறுகிறான்.

1. ஹிஜ்ரத் மேற்கொண்டோரை

2. யாசிப்பவர்களை

3. இரண்டுமே இல்லை


விடை: 2. யாசிப்பவர்களை

ஆதாரம்:

ஆகவே, (இவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் அநாதைகளைக் கடுகடுக்காதீர். யாசிப்பவரை வெருட்டாதீர். (93:9-10) 


அல்லாஹ் எந்நோயையும் அதற்குரிய _______ அருளாமல் இறக்குவதில்லை.

வினாடி வினா

அல்லாஹ் எந்நோயையும் அதற்குரிய _______ அருளாமல் இறக்குவதில்லை.

1. உயிரழப்புகளை

2. நன்மைகளை

3. நிவாரணியை


விடை: 3. நிவாரணியை

ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

அல்லாஹ் எந்நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 5678. , அத்தியாயம்: 76. மருத்துவம்)


நம் தோற்றங்களையோ அல்லது நம் செல்வங்களையோ அல்லாஹ் பார்ப்பதில்லை. மாறாக, எதை பார்க்கிறான்?

வினாடி வினா

நம் தோற்றங்களையோ அல்லது நம் செல்வங்களையோ அல்லாஹ் பார்ப்பதில்லை. மாறாக, எதை பார்க்கிறான்?


விடை: உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கிறான்

ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 5012., அத்தியாயம்: 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும் )


சாபிட்டப் பின் விரல்களை சூப்புவதின் நன்மை என்ன?

வினாடி வினா

சாபிட்டப் பின் விரல்களை சூப்புவதின் நன்மை என்ன?


விடை: உணவில் எதில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.

ஆதாரம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும். அவற்றில் எதில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், "உங்களில் ஒருவர் உணவு உண்டால் (இறுதியில்) உணவுத் தட்டை வழித்து உண்ணட்டும்" என்றும், உங்களின் "எந்த உணவில் வளம் (பரகத்) உள்ளது” அல்லது "(உங்களின் எந்த உணவில்) உங்களுக்கு வளம் வழங்கப்படும்" (என்பதை அவர் அறியமாட்டார்)" என்றும் இடம்பெற்றுள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 4140., அத்தியாயம்: 36. குடிபானங்கள்)


ஒருவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடந்தால், அவருக்கு அதன் மூலம் அல்லாஹ் எதை எளிதாக்குகிறான்?

வினாடி வினா

ஒருவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடந்தால்,  அவருக்கு அதன் மூலம் அல்லாஹ் எதை எளிதாக்குகிறான்?

1. சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை

2. பாடச்சாலைகளுக்கு செல்லும் பாதையை

3. இரண்டுமே இல்லை


விடை: 1. சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை

ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும்வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான்.

யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச்  செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான்.

அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச்சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், சிரமப்படுவோருக்கு உதவி செய்வது தொடர்பான குறிப்பு இடம்பெறவில்லை.

(ஸஹீஹ் முஸ்லிம்: 5231., அத்தியாயம்: 48. பிரார்த்தனைகள்)


“உலகத்தில் நீ _______ போன்று இரு" என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.

வினாடி வினா

“உலகத்தில் நீ _______ போன்று இரு' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். 

1. ஏழையைப்

2. வழிப் போக்கனைப் 

3. ராஜாவைப்


விடை: 2. வழிப் போக்கனைப்


ஆதாரம்:

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு' என்றார்கள். 

(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) 

'நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு' என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.9 

(ஸஹீஹுல் புகாரி: 6416. , அத்தியாயம்: 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்)


நாம் செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை கண்டால், என்ன செய்ய வேண்டும் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்?

வினாடி வினா

நாம் செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை கண்டால், என்ன செய்ய வேண்டும் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்?


விடை: உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்க வேண்டும்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 6490. , அத்தியாயம்: 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்)


ஓர் ஆத்மாவை வாழ வைகிறவனும், ஓர் ஆத்மாவை அநியாயமாகக் கொலை செய்கிறவனும் யாரை போல் ஆவர்?

வினாடி வினா

ஓர் ஆத்மாவை வாழ வைகிறவனும், ஓர் ஆத்மாவை அநியாயமாகக் கொலை செய்கிறவனும் யாரை போல் ஆவர்?


விடை: ஓர் ஆத்மாவை வாழ வைகிறவன் - மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவன் போலாவான்; ஓர் ஆத்மாவை அநியாயமாகக் கொலை செய்கிறவன் - மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான்.


ஆதாரம்:

இதன் காரணமாகவே ‘‘எவனொருவன் மற்றோர் ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவே தவிர (அநியாயமாகக்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், எவன் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவன் போலாவான்'' என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அளித்த கற்பலகையில்) நாம் வரைந்து விட்டோம். மேலும், அவர்களிடம் நமது பல தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்கள். இதற்குப் பின்னரும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பூமியில் வரம்பு கடந்தே வந்தனர். (5:32)


ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் எல்லா பாவங்களுக்கும் பரிகாரங்களாகுமா?

வினாடி வினா

ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் எல்லா  பாவங்களுக்கும் பரிகாரங்களாகும்.

1. சரி

2. தவறு


விடை: 2. தவறு, பெரும்பாவங்களில் சிக்காதவரை

ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும்பாவங்களில் சிக்காதவரை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 394., அத்தியாயம்: 2. தூய்மை)


_______ இறைநம்பிக்கையில் பாதியாகும்.

வினாடி வினா


_______ இறைநம்பிக்கையில் பாதியாகும்.

1. தொழுகை

2. வெட்கம்

3. தூய்மை


விடை: 3. தூய்மை

ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி  (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்)ஒளியாகும். தானதர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.

இதை அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 381., அத்தியாயம்: 2. தூய்மை)



தொழுகை அறிவிப்பை ஷைத்தான் செவியுற்றால் எவ்வாறு வெருண்டோடுகிறான்?

வினாடி வினா

தொழுகை அறிவிப்பை ஷைத்தான் செவியுற்றால் எவ்வாறு வெருண்டோடுகிறான்?


விடை: வாயு வெளியேறிய வண்ணம் (வெகு தூரம்) வெருண்டோடுகிறான்


ஆதாரம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பை ஷைத்தான் செவியுற்றால் அந்தச் சப்தத்தை கேட்காமலிருப்பதற்காக வாயு வெளியேறிய வண்ணம் (வெகு தூரம்) வெருண்டோடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வந்து (தொழக்கூடியவர்களின் உள்ளத்தில்) ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான். இகாமத் சொல்லும் சப்தத்தைக் கேட்கும்போது அந்தச் சப்தத்தை கேட்காமலிருப்பதற்காக (மீண்டும் வெகுதூரம்) வெருண்டோடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வந்து (தொழக்கூடியவர்களின் உள்ளத்தில்) ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 633., அத்தியாயம்: 4. தொழுகை)


‘‘உன் வயிறு நிறைந்துவிட்டதா?'' என்று அல்லாஹ் அதை கேட்கும்போது,அது ‘‘இன்னும் ஏதும் இருக்கிறதா?'' என்று கேட்கும். அது என்ன?

வினாடி வினா

‘‘உன் வயிறு நிறைந்துவிட்டதா?'' என்று அல்லாஹ் அதை கேட்கும்போது,அது ‘‘இன்னும் ஏதும் இருக்கிறதா?'' என்று கேட்கும். அது என்ன?

1. நரகம்

2. சொர்க்கம்

3. கடல்


விடை: 1. நரகம்


ஆதாரம்:

அந்நாளில் நரகத்தை நோக்கி, ‘‘உன் வயிறு நிறைந்துவிட்டதா?'' என்று நாம் கேட்போம். அதற்கு அது ‘‘இன்னும் ஏதும் இருக்கிறதா?'' என்று கேட்கும். (50:30)


மனிதர்களின் ________ தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் பரவிவிட்டன.

வினாடி வினா

மனிதர்களின் ________ தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் பரவிவிட்டன.

1. கைகள்

2. கண்கள்

3. நாவு


விடை: 1. கைகள்


ஆதாரம்:

மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவிவிட்டன. அவற்றில் இருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக, அவர்களின் தீய செயல்கள் சிலவற்றின் தண்டனையை அவர்களுக்கு (இம்மையிலும்) சுவைக்க வைக்கிறான். (30:41)


ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான் என்று அல்லாஹ் சொல்வதற்கான காரணம் என்ன?

வினாடி வினா

ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான் என்று அல்லாஹ் சொல்வதற்கான காரணம் என்ன?


விடை: ஏனென்றால் மனிதன் காலத்தை ஏசுகிறான்


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

'ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்) ஆவேன். என் கரத்திலேயே அதிகாரமனைத்தும உள்ளது. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டுவருகிறேன்' என்று அல்லாஹ் கூறினான். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.134 

(ஸஹீஹுல் புகாரி: 7491. , அத்தியாயம்: 7. தயம்மும்)


யார் கப்ருக்குப் பக்கத்தில் நின்றால் தன் தாடி நனையும் அளவுக்கு அழக் கூடியவர்களாக இருந்தார்கள்? ஏன்?

வினாடி வினா

யார் கப்ருக்குப் பக்கத்தில் நின்றால் தன் தாடி நனையும் அளவுக்கு அழக் கூடியவர்களாக இருந்தார்கள்? ஏன்?


விடை: உஸ்மான் (ரழி) 


ஆதாரம்:

உஸ்மான் (ரழி) அவர்கள் கப்ருக்குப் பக்கத்தில் நின்றால் தன் தாடி நனையும் அளவுக்கு அழக் கூடியவர்களாக இருந்தார்கள். சுவர்க்கம், நரகத்தை நினைத்தா அழுகின்றீர் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் இல்லை என்றார். இன்னதுக்காகவா அழுகின்றீர் எனக் கேட்கப்பட்டது. அதற்கவர் ‘கப்ர் மறுமையின் முதற்படியாகும் அதில் வென்றால் அதற்குப் பின்னாலுள்ளது மிக இலகுவானது. அதில் வெல்லவில்லை என்றால் அதற்குப்பின்னாலுள்ளது மிகவும் கடினமானது. நான் எந்த மோசமான காட்சியைக் கண்டாலும் கப்ர் எனக்கு அதை விடக் கடினமாகவே தெரிகிறது’ என நபியவர்கள் கூறினார்கள் அதை நினைத்துத்தான் அழுகிறேன் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஹானி

ஆதாரம்: அஹ்மத் 454



மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமா?

வினாடி வினா

மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமே.

1. சரி

2. தவறு


விடை: 1. சரி


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

மனிதர்கள், தம் ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமே. 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 2707. , அத்தியாயம்: 53. சமாதானம்)


நீங்கள் பிரார்த்தித்து _________ வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்.

வினாடி வினா

நீங்கள் பிரார்த்தித்து _________ வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும். 

1. தொழாத

2. தர்மம் செய்யாத

3. அவசரப்படாத


விடை: 3. அவசரப்படாத


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

'நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை' என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 6340. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)


நரகத்தில் உள்ளவர்கள் எந்த மிருகத்தை போன்று குடி நீரை குடிப்பார்கள?

வினாடி வினா

நரகத்தில் உள்ளவர்கள் எந்த மிருகத்தை போன்று குடி நீரை குடிப்பார்கள?

1. நாய்

2. ஒட்டகம்

3. எலி


விடை: 2. ஒட்டகம்


ஆதாரம்:

அத்துடன் முற்றிலும் கொதித்த சுடு நீரைக் குடிப்பீர்கள். (அதுவும் அவசர அவசரமாக) தாகித்த ஒட்டகம் குடிப்பதைப்போல் (நீங்கள்) குடிப்பீர்கள். (56:54-55)



எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பெற்றுள்ளது.

வினாடி வினா

இதற்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பெற்றுள்ளது. அவை என்ன?


விடை: "அல்ஃபாத்திஹா" அத்தியாயமும் "அல்பகரா" அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை.


ஆதாரம்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)" என்று கூறினார்கள்.

அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் "இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லை" என்று கூறினார்கள்.

அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, "உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். "அல்ஃபாத்திஹா" அத்தியாயமும் "அல்பகரா" அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை"என்று கூறினார்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 1472., அத்தியாயம்: 6. பயனிகள் தொழுகையும் சுருக்கத் தொழுகையும்)


அல்லாஹ் வஹீ அறிவித்த இரு பெண்மணிகள்.

வினாடி வினா

எந்த இரு பெண்மணிகளுக்கு வஹீ அறிவித்ததாக அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்?


விடை:

1. மூஸாவின்(அலை) தாய்க்கு

2. மர்யம் (அலை)


ஆதாரம்:

(ஆகவே, பலவீனமானவர்களில் மூஸாவை நாம் படைத்தோம். மூஸா பிறந்த சமயத்தில், பலவீனமான இவர்களுடைய மக்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் கொலை செய்து கொண்டிருந்தான். ஆகவே மூஸாவின் தாய், தன் இக்குழந்தையையும் ஃபிர்அவ்ன் கொலை செய்து விடுவானோ என்று அஞ்சி நடுங்கினாள்.) ஆகவே, (அச்சமயம்) மூஸாவின் தாய்க்கு நாம் வஹ்யி மூலம் அறிவித்தோம்: (குழந்தையை உன்னிடமே வைத்துக் கொண்டு) ‘‘ அவருக்குப் பால் கொடுத்து வா. (உன்னிடம் இருப்பதில்) அவரைப் பற்றி நீ பயந்தால், அவரை (பேழையில் வைத்து) ஆற்றில் எறிந்துவிடு. நீ அவரைப் பற்றிக் கவலைப்படாதே! பயப்படாதே! நிச்சயமாக நாம் அவரை உன்னிடமே கொண்டு வந்து சேர்த்து, அவரை (நம்) தூதர்களில் ஒருவராகவும் ஆக்குவோம்'' (என்று அறிவித்தோம்.) (28:7)


(மேலும், மர்யமை நோக்கி) வானவர்கள் ‘‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன் (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான்'' என்றும் ‘‘அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம்'' என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்'' என்றும் கூறினார்கள். (3:45)



நபி (ஸல்) அவர்களின் சமூகத்திலிருந்து விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேர்

வினாடி வினா

நபி (ஸல்) அவர்களின் சமூகத்திலிருந்து விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேர் எவ்விதமான தன்மை உடையவர்களாக இருப்பர்?


விடை: அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்


ஆதாரம்:

…...எனவே, அவர்கள் புறப்பட்டு வந்து, '(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) எழுந்து, 'அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, 'அவர்களில் நானும் ஒருவனா?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்' என்று கூறினார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 5705. , அத்தியாயம்: 76. மருத்துவம்)


தர்மத்தில் சிறந்தது எது?

வினாடி வினா

தர்மத்தில் சிறந்தது எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?


விடை: ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும்


ஆதாரம்:

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்' என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகி விட்டிருக்கும்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 2748. , அத்தியாயம்: 55. மரண சாசனங்கள்)


நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும்

வினாடி வினா

நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும் என எவற்றை கூறினார்கள்?


விடை: குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர்பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது.


ஆதாரம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள். (அவையாவன:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர்பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது.

ஒப்பாரிவைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்.

இதை அபூமாலிக் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 1700., அத்தியாயம்: 11. இறுதிக் கடன்கள்)



யார் போலியான இரு ஆடைகளை அணிந்து கொண்டவர் போலாவார்?

வினாடி வினா

நபி (ஸல்) அவர்கள் "எதற்கு போலியான இரு ஆடைகளை அணிந்து கொண்டவர் போலாவார்" என உவமை கூறினார்?


விடை:

ஆதாரம்:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நான் என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக்கொள்ளலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கிடைக்கப்பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக்கொள்கிறவர், போலியான இரு ஆடைகளை அணிந்து கொண்டவர் போலாவார்" என்று கூறினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 4317., அத்தியாயம்: 37. ஆடையும் அலங்காரமும்)


தொழுகைக்குப் பின்னரும் ஒரு துஆவை சொல்வதை விட்டு விடாதீர்கள்

வினாடி வினா

இறைத்தூதர்(ஸல்) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் ஒரு துஆவை சொல்வதை விட்டு விடாதே என எந்த துஆ’வை குறிப்பிட்டு அறிவுறுத்தினார்கள்?


விடை: அல்லாஹும்ம அயின்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வஹுஸ்னீ இபாதிக

ஆதாரம்:

அல்லாஹும்ம அயின்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வஹுஸ்னீ இபாததிக

பொருள்: அல்லாஹ்வே! உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் உதவி செய்வாயாக! என்று ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நீ சொல்வதை விட்டு விடாதே என நான் உனக்கு அறிவுறுத்துகின்றேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆத் (ரலி),

நூல்கள் : அபூதாவூத் 1301, நஸயீ 128


அல்லாஹ்வின் தூதர் ________ எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள்.

வினாடி வினா

இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் _______ எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள்.

1. இலேசானதையே (சுலபமானதை)

2. கடினமானதையே


விடை: 1. இலேசானதையே

ஆதாரம்:

ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே - அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் -எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர. (அப்போது மட்டும் பழி வாங்குவார்கள்.) 

(ஸஹீஹுல் புகாரி: 3560. , அத்தியாயம்: 61. நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்)