வெள்ளி, 30 அக்டோபர், 2020

நபி(ஸல்) அவர்களுக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள்

 வினாடி வினா

இதற்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன? 



விடை:

1. எதிரிகளுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நபி(ஸல்) அவர்கள் உதவப்பட்டுள்ளார்.


2. பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் நபி(ஸல்) அவர்களுக்கு  ஆக்கப்பட்டுள்ளது. 


3. போரில் கிடைக்கிற பொருள்கள் நபி(ஸல்) அவர்களுக்கு  ஹலாலாக்கப்பட்டுள்ளன. 


4. (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.


5. ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக நபி(ஸல்)  அவர்கள் அனுப்பப்பட்டு உள்ளார். 


ஆதாரம்:

'எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை. (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 335. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)



வியாழன், 29 அக்டோபர், 2020

நயவஞ்சகர்களின் தொழுகை

வினாடி வினா

நயவஞ்சகர்களின் தொழுகை எவ்வாறு இருக்கும் என அல்லாஹ் கூறுகிறான்?



விடை: அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கிறார்கள். மேலும் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாமல் வேண்டுமென தாமதப்படுத்தி, நிதானமின்றி அவசர அவசரமாகத் தொழுவான்.


ஆதாரம்:


நிச்சயமாக (நிராகரிக்கும்) இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்(கக் கருது)கின்றனர். எனினும், அல்லாஹ்வோ அவர்களை வஞ்சித்து விடுகிறான். அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கிறார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவே தவிர அல்லாஹ்வை தியானிப்பதில்லை. (4:142)


அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் பஸ்ரா நகரில் தமது இல்லத்திலிருந்த அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் லுஹ்ர் தொழுதுவிட்டுச் சென்றேன். (அன்னாரின் இல்லம் பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் இருந்தது) நாங்கள் அவர்களிடம் சென்றபோது "நீங்கள் அஸ்ர் தொழுதுவிட்டீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், "(இல்லை) நாங்கள் இப்போதுதான் லுஹர் தொழுதுவிட்டு வருகிறோம்" என்று அவர்களிடம் சொன்னோம். அனஸ் (ரலி) அவர்கள், "அவ்வாறாயின் நீங்கள் அஸ்ர் தொழுங்கள்" என்றார்கள். உடனே நாங்கள் எழுந்து (அஸ்ர்) தொழுதோம். நாங்கள் தொழுது முடித்ததும் அனஸ் (ரலி) அவர்கள், "இதுதான் நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் சூரியனை எதிர்பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பான். சூரியன் (சரியாக) ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே (உதயமாகி அல்லது மறைந்து) வரும்போது அவன் (அவசர அவசரமாகக் கோழி கொத்துவதைப் போன்று) நான்கு கொத்து கொத்துவான். அவன் அதில் மிகக் குறைவாகவே இறைவனை நினைவுகூருவான்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என்றார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 1097., அத்தியாயம்: 5. பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்)



புதன், 28 அக்டோபர், 2020

ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்வது

வினாடி வினா


ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்கு என்னவாக ஆகி விடும்? 


விடை: தர்மமாகிவிடும்


ஆதாரம்:


'ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகிவிடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 55. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


செவ்வாய், 27 அக்டோபர், 2020

மாதாந்திர கேள்வி தொகுப்புகள் ஓர் அறிமுகம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ! 

“வினாடி வினா” குழுமத்தில் ஒரு புதிய நடைமுறை.


ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும், அந்தந்த மாதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளிலிருந்து ஏதாவது 10 பத்து கேள்விகள் இணைப்பின் வழி கேட்கப்படும். நமது புரிதலை பரிசீலனை செய்வதற்காகவே இந்த முயற்சி. இதுவரை, ஒவ்வொரு பதிலுடன் ஆதாரத்தையும் சேர்த்து பகிர்ந்துள்ளோம். ஆகையால், அந்த பகிர்வுகளிலிருந்து எவ்வளவு நாம் ஞாபகம் வைத்திருக்கிறோம் என்பதை சோதிக்கும் வண்ணமாக இந்த மாதாந்திர கேள்வி தொகுப்புகள் அமையவிருக்கின்றன. 


ஒவ்வொரு கேள்விகளுக்கும் தெரிவுகள்(options) வழங்கப்பட்டிருக்கும். சில கேள்விகள், கேட்கப்பட்ட அதே சாயலில் அமையும். சில கேள்விகள், பொருள் மாறாத வண்ணம் மாற்றி அமைக்கப்படும். கேள்விகளுக்கு பதில்களை தேர்வு செய்த உடனே, நீங்கள் எவ்வாறு செய்துள்ளீர்கள் என்பதற்கேற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் முயற்சியில், சரியாக செய்யாவிட்டாலும், மீண்டும் மீண்டும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கும் வண்ணம் இணைப்பை அமைத்துள்ளோம். ஆகவே, கூடிய பட்சம் நினைவுக்கு வருபவைகளை வைத்து பதில்களை பதிவிடுங்கள். உங்கள் பதில்கள் யாருக்கும் பகிரப்படாது என்பதை உறுதிச் செய்கிறோம். 


அந்தந்த மாதத்தின் இறுதி நாளில், மாதாந்திர கேள்வி தொகுப்புகள் அனுப்பப்படும். (உதாரணம்: ஒக்டோபர் மாதத்தில்: 31ம் தேதி மாதாந்திர கேள்வி தொகுப்புகள் அனுப்பப்படும். ஒக்டோபர் 1ம் முதல் 30ம் தேதி வரை கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் இந்த மாத கேள்விகள் அமையும்) 


நமது முதல் மாதாந்திர தொகுப்பு, ஒக்டோபர் 31ம் தேதி அனுப்பப்படும். அதற்கு முன்னோட்டமாக, விடுப்பட்ட முந்தைய மாதங்களுக்கான மாதாந்திர கேள்வி தொகுப்புகளையும் தயாரித்துள்ளோம்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை (link) கிளிக் செய்து, கேள்விகளைச் செய்து பாருங்கள், முடிந்தால் மற்றவர்களுடன் பகிரவும் செய்யுங்கள். 👇🏼👇🏼👇🏼


ஜூன் 2020 மாதாந்திர தொகுப்பு


ஜூலை 2020 மாதாந்திர தொகுப்பு


ஆகஸ்ட் 2020 கேள்வி தொகுப்பு


செப்டம்பர் 2020 கேள்வி தொகுப்பு





தற்கொலை செய்தவர்களுக்கு உள்ள தண்டனைகள்

 வினாடி வினா

தற்கொலை செய்தவர்களுக்கு எவ்வாறு தண்டனைகள் வழங்கப்படும்?


விடை:


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 106 

(ஸஹீஹுல் புகாரி: 5778. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)



திங்கள், 26 அக்டோபர், 2020

ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால்..

வினாடி வினா

ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அவருடைய எத்தனை நாள் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை?

  1. 4 நாட்கள்
  2. 4 வாரங்கள்
  3. 40 நாட்கள்
  4. 4 மாதங்கள்



விடை: 3. 40 நாட்கள்


ஆதாரம்:


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.

இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரிடமிருந்து ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 4488., அத்தியாயம்: 39. முகமன் (சலாம்))


ஞாயிறு, 25 அக்டோபர், 2020

மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே எழுதப்படும் நான்கு விஷயங்கள்

வினாடி வினா


மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே எந்த நான்கு விஷயங்கள் எழுதப்பட்டு விடுகின்றன?


விடை:

1. ஆணா / பெண்ணா

2. நல்லவனா / கெட்டவனா 

3. அவனுக்குச் கொடுக்கப்படவிருக்கும் செல்வம்

4. அவனுடைய வாழ்நாள்


ஆதாரம்:

'அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், 'யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது 'அலக்' (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறது' என்று கூறிவருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 318. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


சனி, 24 அக்டோபர், 2020

மறுமை நாளில், மலைகளின் நிலை

வினாடி வினா

மறுமை நாளில், மலைகள் மேகங்களைப் போல ஆகாயத்தில் பறந்தோடும்.

1. சரி

2. தவறு



விடை: 1. சரி


ஆதாரம்:


நீர் காணும் மலைகளை அவை வெகு உறுதியாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர். (எனினும், அந்நாளில்) அவை மேகத்தைப் போல் (ஆகாயத்தில்) பறந்தோடும். ஒவ்வொரு பொருளையும் (படைத்து) அதன் இயற்கை அமைப்பின் மீது உறுதிப்படுத்திய அல்லாஹ்வுடைய கட்டளையால் (அவ்வாறு நடைபெறும்). நிச்சயமாக அவன் நீங்கள் செய்து கொண்டிருக்கும் அனைத்தையும் நன்கறிபவன் ஆவான். (27:88)


வெள்ளி, 23 அக்டோபர், 2020

தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது

வினாடி வினா

எத்தனை நாள்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்?

  1. 1
  2. 3
  3. 5
  4. 7


விடை: 4. 7


ஆதாரம்:


 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'ஏழு நாள்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்.'

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 897. , அத்தியாயம்: 11. ஜும்ஆத் தொழுகை)


வியாழன், 22 அக்டோபர், 2020

ஜிப்ரீல் (அலை) அவர்கள் யாரை குறித்து நபி (ஸல்) அவர்களிடம் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார்

வினாடி வினா

ஜிப்ரீல் (அலை) அவர்கள் யாரை குறித்து நபி (ஸல்) அவர்களிடம் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார்?


  1. குடும்பத்தினர்
  2. அண்டை வீட்டார்
  3. மார்க்க தலைவர்கள்


விடை: 2. அண்டை வீட்டார்


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அவ்வப்போது) அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கிவிடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 6015. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)



புதன், 21 அக்டோபர், 2020

நபி(ஸல்) அவர்களின் கனவில், எப்படிப்பட்ட மனிதரின் தலை நசுக்கப்பட்டதை கண்டார்?

வினாடி வினா

நபி(ஸல்) அவர்களின் கனவில், எப்படிப்பட்ட மனிதரின் தலை நசுக்கப்பட்டதை கண்டார்?


விடை: தொழுகையைத் தொழாமல் உறங்கியவயவரின் தலை நசுக்கப்பட்டதை கண்டார்.


ஆதாரம்:

ஸமுரா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் கனவில் கண்ட தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டு 'அவர் குர்ஆனைக் கற்று தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்' என்று விளக்கமளித்தார்கள்.

தொழாமல் உறங்குபவரின் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான். 

(ஸஹீஹுல் புகாரி: 1143. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்).



செவ்வாய், 20 அக்டோபர், 2020

நாம் உறங்கும்போது நம் பிடரியில் ஷைத்தான் போடும் முடிச்சுகள்

வினாடி வினா 

நாம் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் எத்தனை முடிச்சுகளைப் போடுகிறான்?

  1. 1
  2. 3
  3. 5
  4. 7


விடை: 2. 3


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

'உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்'. 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 1142. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


திங்கள், 19 அக்டோபர், 2020

அல்லாஹ்வை துதிக்கும் சொற்களில் மிகவும் சிறந்தது என அல்லாஹ்வே தேர்ந்தெடுத்துள்ளது

வினாடி வினா


அல்லாஹ்வை துதிக்கும் சொற்களில் மிகவும் சிறந்தது என அல்லாஹ்வே தேர்ந்தெடுத்துள்ளது எது? 


  1. சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி
  2. லாயிலாஹா இல்லல்லாஹ்
  3. லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாஹ் பில்லாஹ்


விடை: 1. சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி


ஆதாரம்:

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "(இறைவனைத் துதிக்கும்) சொற்களில் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ், "தன் வானவர்களுக்காக" அல்லது "தன் அடியார்களுக்காக" "சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி" (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவன் தூயவன் எனத் துதிக்கிறேன்) என்பதையே தேர்ந்தெடுத்துள்ளான்" என்று பதிலளித்தார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 5277., அத்தியாயம்: 48. பிரார்த்தனைகள்)


ஞாயிறு, 18 அக்டோபர், 2020

இணைவைக்கும் பெற்றோருடன் உறவைப் பேணுதல்

வினாடி வினா


இணைவைக்கும் பெற்றோருடன் உறவைப் பேண இஸ்லாத்தில் அனுமதி உண்டா?


  1. ஆம் 
  2. இல்லை


விடை: ஆம்


ஆதாரம்:

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார் 

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக இருந்தார்.) நான் நபி(ஸல்) அவர்களிடம் '(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று கூறினார்கள்.11 

'எனவே, அஸ்மாவின் தாயர் தொடர்பாக, 'மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்' எனும் (திருக்குர்ஆன் 60:8 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்' என (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார். 

(ஸஹீஹுல் புகாரி: 5978,5979.. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)


சனி, 17 அக்டோபர், 2020

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான தொழுகை

வினாடி வினா

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான தொழுகை யாருடைய தொழுகையாகும்?

  1. நபி (ஸல்)
  2. ஸுலைமான் (அலை)
  3. தாவூத் (அலை)


விடை: 3. தாவூத் (அலை)


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

'அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ் விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்'. 

இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 1131. , அத்தியாயம்: 19. தஹஜ்ஜுத்)



வெள்ளி, 16 அக்டோபர், 2020

மறுமைநாளில், மக்கள் அல்லாஹ்வின் முன்னால்...

வினாடி வினா


மறுமைநாளில் மக்கள் அல்லாஹ்வின் முன்னால் எவ்வாறு இருப்பார்கள்?


விடை: மதி மயங்கியவர்களாக இருப்பார்கள்.


ஆதாரம்:

அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும், தான் பாலூட்டும் குழந்தையை மறந்துவிடுவதையும் ஒவ்வொரு கர்ப்பினிப் பெண்ணிண் கருவும் சிதைந்து விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். (நபியே!) மனிதர்களை மதி மயங்கியவர்களாக நீர் காண்பீர். அவர்கள் (மதியிழக்கும் காரணம்) போதையினால் அல்ல. அல்லாஹ்வுடைய வேதனை மிக்க கடினமானது. (அதைக் கண்டு திடுக்கிட்டு அவர்கள் மதியிழந்து விடுவார்கள்.)(22:2)


வியாழன், 15 அக்டோபர், 2020

எவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு?

வினாடி வினா


எவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு இடையில் _____________ பரவுவதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.


  1. பொறாமை குணம்
  2. மானக்கேடான செயல்கள்
  3. கெட்ட எண்ணங்கள்


விடை: 2. மானக்கேடான செயல்கள்


ஆதாரம்:


எவர்கள் (இதற்குப் பின்னரும்) நம்பிக்கையாளர்களுக்கு இடையில் மானக்கேடான செயல்கள் பரவுவதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அதனால் ஏற்படும் தீங்குகளை) அல்லாஹ்தான் நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். (24:19)



புதன், 14 அக்டோபர், 2020

இப்லீஸிடம் மிகவும் மரியாதைக்குரிய ஷைத்தான்

வினாடி வினா


இப்லீஸிடம் மிகவும் மரியாதைக்குரிய ஷைத்தான் எவன்?


  1. மக்களிடையே பெருங்குழப்பத்தை ஏற்படுத்துபவன்
  2. பொய் சாட்சியம் கூறுபவன்
  3. வீண் விரயம் செய்பவன்


விடை: 1. மக்களிடையே பெருங்குழப்பத்தை ஏற்படுத்துபவன்.


ஆதாரம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்லீஸின் சிம்மாசனம் கடலின் மீது அமைந்துள்ளது. அவன் (அங்கிருந்தே) தன் படைகளை அனுப்பி, மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துகிறான். மக்களிடையே பெருங்குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் மரியாதைக்குரியவன் ஆவான்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 5418., அத்தியாயம்: 50. நயவஞ்சகத் தன்மைகளும் அதற்குரிய தண்டனைகளும்)


செவ்வாய், 13 அக்டோபர், 2020

தொழுகையில் நம் பிரார்த்தனை ஏற்கப்பட எது மிகவும் தகுதியான இடம்

வினாடி வினா


தொழுகையில் நம் பிரார்த்தனை ஏற்கப்பட எது மிகவும் தகுதியான இடமாகும்? 


விடை: சஜ்தாவில்


ஆதாரம்:


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில் உடல் நலிவுற்றிருந்தபோது தமது அறையின்) திரைச் சீலையை விலக்கி (பள்ளிவாசலுக்குள் நோக்கி)னார்கள். அப்போது மக்கள், அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தனர். (அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களே! நபித்துவத்தின் நற்செய்திகளிலிருந்து ஒரு முஸ்லிம் காண்கின்ற அலலது அவருக்குக் காட்டப்படுகின்ற நல்ல (உண்மையான) கனவுகளைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை. அறிந்து கொள்ளுங்கள்: ருகூஉ அல்லது சஜ்தாச் செய்துகொண்டிருக்கையில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று நான் தடை விதிக்கப்பெற்றுள்ளேன். ருகூஉவில் வலிவும் மாண்பும் உடைய இறைவனை மகிமைப்படுத்துங்கள். சஜ்தாவில் முனைந்து பிரார்த்தியுங்கள். உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும் என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 824., அத்தியாயம்: 4. தொழுகை)



திங்கள், 12 அக்டோபர், 2020

ஒரு இறைநம்பிக்கையாளர் தம் பாவங்களை எப்படி கருதுவார்?

வினாடி வினா


ஒரு இறைநம்பிக்கையாளர் தம் பாவங்களை எப்படி கருதுவார்?


விடை: இறைநம்பிக்கையாளர் தம் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார்.


ஆதாரம்:

ஹாரிஸ் இப்னு சுவைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் எங்களுக்கு இரண்டு ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் குறிப்பிட்டார்கள். மற்றொன்றைக் தாமாகக் கூறினார்கள். (அவையாவன:) 

1. இறைநம்பிக்கையாளர் தம் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார். அவர் ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலைத் தம் மீது விழுந்துவிடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் இருப்பார். ஆனால், பாவியோ தன் பாவங்களைத் தன்னுடைய மூக்கின் மேல் பறந்து செல்லும் ஈயைப் போன்று (அற்பமாகக்) காண்பான் - இதைக் கூறியபோது இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் தங்களின் மூக்குக்கு மேலே (ஈயை) விரட்டுவது போன்று தம் கையால் சைகை செய்தார்கள். 

பிறகு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் (பின்வருமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச்) சொன்னார்கள்: 

2. ஒரு மனிதன் (பயணத்தினிடையே) ஓய்வெடுக்க ஓரிடத்தில் இறங்கினான். அந்த இடத்தில் அவனுக்கு (உணவோ தண்ணீரோ கிடைக்காது என்பதால்) ஆபத்து (காத்து) இருந்தது. அவனுடைய உணவும் பானமும் வைக்கப்பட்டிருந்த அவனுடைய வாகனப் பிராணியும் அவனுடன் இருந்தது. அப்போது அவன் தலையைக் கீழேவைத்து ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கி எழுந்தான். அப்போது அவனுடைய வாகனப் பிராணி (தப்பி ஒடிப்) போயிருந்தது. (எனவே அவன் அதைத் தேடிப் புறப்பட்டான்.) அப்போது அவனுக்குக் 'கடுமையான வெப்பமும் தாகமும்' அல்லது 'அல்லாஹ் நாடிய (கஷ்டம்) ஒன்று' ஏற்பட்டது. அவன், 'நான் முன்பிருந்த அதே இடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்' என்று கூறியவாறு (அங்கு) திரும்பிச் சென்றான். பிறகு ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கினான். பிறகு தன் தலையை உயர்த்தினான். அப்போது தப்பிப்போன தன்னுடைய பிராணி தன்னருகில் இருப்பதைக் கண்டான். (இப்போது அவன் எந்த அளவுக்கு மகிழ்வான்!) அந்த மனிதன் மகிழ்ச்சி அடைவதைவிடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புக் கோரித் தன்னிடம் திரும்புவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான். 

இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. 

(ஸஹீஹுல் புகாரி: 6308. , அத்தியாயம்: 80. பிரார்த்தனைகள்)



ஞாயிறு, 11 அக்டோபர், 2020

மனிதன் அதிகமாக என்ன செய்பவனாக இருக்கிறான்?

வினாடி வினா


மனிதன் அதிகமாக என்ன செய்பவனாக இருக்கிறான்?


  1. தர்க்கம்
  2. மோசடி
  3. விரயம்


விடை: 1. தர்க்கம்


ஆதாரம்:

மனிதர்களுக்கு இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் விவரித்திருக்கிறோம். எனினும், மனிதன்தான் அதிகமாக (வீண்) தர்க்கம் செய்பவனாக இருக்கிறான். (18:54)