வியாழன், 1 அக்டோபர், 2020

அல்லாஹ் தடைச் செய்துள்ள மற்றும் வெறுத்து விலக்கியுள்ள மூன்று விஷயங்கள்

வினாடி வினா 

அல்லாஹ் மூன்று விஷயங்களை தடைச் செய்துள்ளான்; மூன்றை வெறுத்து விலக்கியுள்ளான். அவை என்ன?


விடை: 

அல்லாஹ் தடை செய்துள்ள விஷயங்கள்:

  1. பெற்றோரை புண்படுத்துவது 
  2. அடுத்தவருக்கு தர வேண்டியதை தர மறுப்பது; அடுத்தவருக்கு உரியதைத் தருமாறு கேட்பது.
  3. பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது. 

அல்லாஹ் வெறுத்து விலக்கியுள்ள விஷயங்கள்:

  1. தேவையின்றி அதிகமாகப் பேசுவது. 
  2. அதிகமாகக் கேள்வி, அல்லது யாசகம் கேட்பது.
  3. செல்வத்தை வீணாக்குவது.


ஆதாரம்:

வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

"சலாமுன் அலைக்க (உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்); இறைவாழ்த்துக்குப் பின்! அல்லாஹ் மூன்று விஷயங்களைத் தடை செய்துள்ளான்; மூன்றை (வெறுத்து) விலக்கியுள்ளான். பெற்றோரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுத்தவருக்குரியதை) தருமாறு கேட்பது ஆகியவற்றைத் தடை செய்துள்ளான். (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமற்றதை)ப் பேசுவதையும், (தேவையின்றி) அதிகமாகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் (வெறுத்து) விலக்கியுள்ளான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என முஃகீரா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கு (பதில்) எழுதினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 3537., அத்தியாயம்: 30. நீதித்துறை தீர்ப்புகள் - இஸ்லாமிய தீர்ப்புகள்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக