வியாழன், 8 அக்டோபர், 2020

நம்மில் யாரும் எதை விரும்ப வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்?


வினாடி வினா


கோடிட்ட இடத்தை நிரப்பவும்.

“உங்களில் யாரும் ___________ விரும்பவேண்டாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 


விடை: மரணத்தை


ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாரும் தமக்கு நேர்ந்துவிட்ட ஒரு துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித் தான் ஆகவேண்டும் என்றிருந்தால், "இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!" என்று கேட்கட்டும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில்,  "தம்மைத் தாக்கிவிட்ட துன்பத்தின் காரணத்தால்" என்று  காணப்படுகிறது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 5203., அத்தியாயம்: 48. பிரார்த்தனைகள்)


நள்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அனஸ் (ரலி) அவர்கள், "உங்களில் யாரும் மரணத்தை விரும்பவேண்டாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிராவிட்டால், இறப்பை நான் விரும்பியிருப்பேன்" என்று கூறினார்கள்.

நள்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் இதை அறிவித்தபோது, (அவர்களுடைய தந்தை) அனஸ் (ரலி) அவர்கள் உயிரோடு இருந்தார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 5204., அத்தியாயம்: 48. பிரார்த்தனைகள்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக