வினாடி வினா
தந்தையின் கடுமையான போக்கை இப்ராஹீம்(அலை) அவர்கள் எப்படி எதிர்கொண்டார்?
விடை: அதை அமைதியாக எதிர்கொண்டார்கள். தந்தைக்கு அமைதி கிடைக்க வேண்டினார்கள்.
ஆதாரம்:
அதற்கு (இப்றாஹீம், இதோ நான் செல்கிறேன்) ‘‘உம்மீது ஸலாம் உண்டாவதாக! பின்னர் நான் உமக்காக என் இறைவனிடத்தில் மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக என் இறைவன் என் மீது மிக்க இரக்கமுடையவனாக இருக்கிறான்'' என்று கூறினார். (19:47)
தந்தையை கண்ணியக் குறைவாகவோ, வெறுப்புற்றோ பேசவில்லை. இதில் நமக்கு படிப்பினை இருக்கிறது. பெற்றோர் எவ்வளவு தீயவர் ஆயினும், மற்றும் நாம் நடக்கும் முறையானது அல்லாஹ் ஏவிய பிரகாரம் பெற்றோருக்கு நன்மை செயவோராகவும் நலம் நாடுவோராகவும் இருக்க வேண்டும்.
👆🏼👆🏼👆🏼
இப்ராஹிம்(அலை) தம் தந்தைக்கு இஸ்லாத்தை எத்தி வைத்த முறையிலிருந்து நாம் பெறும் படிப்பினைகள்.
இஸ்லாத்தை எத்தி வைப்பவர், அழகிய முறையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
நரகத்தில் விழுந்து விடக்கூடாதே என்ற கருணை பொங்க பிரச்சாரம் செய்ய வேண்டும்.
நமக்கு அல்லாஹ் வழங்கிய நேர்வழி பற்றி கர்வம் கொண்டு பிரச்சாரம் செய்ய முனையக்கூடாது.
தம் தந்தையை நரக நெருப்பு தீண்டி விடக்கூடாதே என்ற எண்ணம் மனதில் நிறைந்தவராக அக்கறையும், பாசமும், கருணையும் பொங்க இப்ராஹிம்(அலை) சத்திய பிரச்சாரத்தை தம் தந்தையிடம் செய்தது போன்றே, பெற்றோர் எவ்வளவு கொடியவரானாலும் அன்பொழுக பழகவும், பேசவும், பிரச்சாரம் செய்யவும் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக