சனி, 10 அக்டோபர், 2020

அமானிதம் மற்றும் நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் நாம் மறுமை நாளை எதிர்ப்பார்க்கலாம்

வினாடி வினா


அமானிதம் மற்றும் நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் நாம் மறுமை நாளை எதிர்ப்பார்க்கலாம் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவை எவ்வாறு பாழ்படுத்தப்படும்? 


விடை: எந்தக் காரியமாயினும், பொறுப்பாயினும் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது.


ஆதாரம்:

...' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்.' அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, 'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 59. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு கிராமவாசியிடம்), 'நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமைநாளை நீ எதிர்பார்க்கலாம்.' என்று கூறினார்கள். அவர் 'இறைத்தூதர் அவர்களே! அது எவ்வாறு பாழ்ப்படுத்தப்படும்?' என்று கேட்டதற்கு '(ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்கத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 6496. , அத்தியாயம்: 7. தயம்மும்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக