வியாழன், 1 அக்டோபர், 2020

இஸ்லாத்தை எத்திவைக்கும் தொனி

வினாடி வினா 

நாம் இஸ்லாத்தை எத்திவைக்கும் தொனி எவ்வாறு அமைய வேண்டும்?


விடை: தந்தையிடம் இப்ராஹீம்(அலை) அவர்கள் சத்தியப் பிரச்சாரம் செய்தது போன்று அமைய வேண்டும். அக்கறையுடன் அறிவுப்பூர்வமான முறையில் வழி தவறியவர் நேர்வழிக்கு வந்துவிடவேண்டும் என்ற கவலையுடன் அழைப்பு விடுக்க வேண்டும். 


ஆதாரம்:

(நபியே! மனிதர்களை) மதிநுட்பத்தைக் கொண்டும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உமது இறைவனுடைய வழியின் பக்கம் அழைப்பீராக! மேலும், அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்வீராக. உமது இறைவனுடைய வழியிலிருந்து வழி தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான். (16:125)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக