வியாழன், 1 அக்டோபர், 2020

இறைமறுப்பாளர்களுக்காக கேட்கப்படும் மன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா?

வினாடி வினா 

இப்ராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் தன் தந்தைக்காக கேட்ட பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டானா?


விடை:  ஏற்றுக்கொள்ளவில்லை


ஆதாரம்:

இணைவைத்து வணங்குபவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல; அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவிர்களாகயிருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்? இப்றாஹீம் (நபி) தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தன் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவே தவிர வேறில்லை. (அவருடைய தந்தை) அல்லாஹ்வுக்கு எதிரி எனத் தெளிவாகத் தெரிந்ததும் அ(வருக்காக மன்னிப்புக் கோருவ)திலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்றாஹீம் அதிகம் பிரார்த்திப்பவரும் மிக இரக்கமும் அடக்கமும் உடையவரும் ஆவார். (9:113-114)

இப்ராஹீம் அலை அவர்களின் தந்தை ஆஜர் அவர்கள் அல்லாஹ்வை இறைவனாக ஏற்க மறுப்பவராகவும், முஷ்ரீக்கூன்களினல் ஒருவராக இருந்த காரணத்தால் அவருக்கு செய்யப்பட்ட பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்கவில்லை.

ஆகவே நாம் ஈமான் கொள்ளாதவர்களுக்கு(காஃபிர்களுக்கு) அல்லாஹ்விடம் அவர்களுக்கு நேர்வழி காட்ட பிரார்த்தனை செய்யலாம் தவிர, அவர்களுக்காக பாவமன்னிப்பு கேட்க அனுமதி இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக