வியாழன், 1 அக்டோபர், 2020

பெற்றோரை புண்படுத்துதல்

வினாடி வினா 

பெற்றோரை புண்படுத்துவதை அல்லாஹ் எந்த அளவுக்கு வெறுக்கிறான் என்பதை குறிப்பிடும் குர்ஆன் வசனங்களில் ஒன்றையும் ஹதீஸ்களில் ஒன்றையும் குறிப்பிடுக.


விடை:

(நபியே!) உமது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உம்மிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ' என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுவீராக. (17:23)

அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். 

(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'பெரும்பாவங்களிலேயே மிகப் பெரிய பாவங்களை உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம் (தெரிவுயுங்கள்), அல்லாஹ்வன் தூதரே' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும் ஆகும்' என்றார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 6273. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக