வினாடி வினா
மரணித்த பெற்றோருக்கு நன்மை செய்தலில் மார்க்கம் அனுமதித்த வழிகாட்டல்கள் என்னென்ன?
விடை:
பெற்றோர் நேர்ச்சை செய்திருந்து அல்லது நிய்யத்துடன் இருந்து அதை அவர்கள்
செய்ய இயலாது மரணித்து விட்டிருப்பின், அவர்களின் நேர்ச்சையை நிறைவேற்றுவது
பெற்றோருக்கு நன்மை செய்தலில் அடங்கும்.
ஆதாரம்:
1. தர்மம் செய்தல்
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார்.
அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம் செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என்றார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: 1388. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)
2. நோன்பு நோற்றல்
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது' என்றார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: 1953. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)
3. ஹஜ் செய்தல்
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(உக்பா இப்னு ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று,
'(இறைத்தூதர் அவர்களே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார்' என்றார்.அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீ தானே
அதை நிறைவேற்றுவாய்?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (நானே நிறைவேற்றுவேன்)'
என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்' என்றார்கள்.*
(ஸஹீஹுல் புகாரி: 6699. , அத்தியாயம்: 7. தயம்மும்)
4. துஆச் செய்தல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும்
நின்றுவிடுகின்றன; 1.நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம்: 3358., அத்தியாயம்: 25. வசியத் - இறுதி விருப்பம்)
👆🏼👆🏼👆🏼
எனவே இவற்றை உற்றுநோக்கும்போது
- இறந்தவருக்கு நிய்யத் அல்லது நேர்ச்சை இருந்திருக்குமாயின், மார்க்க ரீதியான அல்லாஹ்வின் கடனாக அமைந்து விட்ட விஷயங்களை நாம் செய்யும் போது பெற்றோருக்கு பலனளிக்கும்.
- உலக ரீதியான கடன்கள் மற்றும் வஸிய்யத்தை நிறைவேற்றுவது பெற்றோருக்கு பலனளிக்கும்.
- அதோடு நாம் செய்யும் பிரார்த்தனைகளும் பலனளிக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக