வியாழன், 1 அக்டோபர், 2020

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்)செயல் யாதெனில்...

வினாடி வினா 

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்)செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் ________ இருப்பதேயாகும்.

  1. நிலையாக
  2. பித்அத் புகுத்தாமல்
  3. இறையச்சம் உடையதாக

விடை: 1. நிலையாக

ஆதாரம்:
ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) இரவு நேரத்தில் ஒரு பாயை அறை போல் ஆக்கிக்கொண்டு (அதில்) தொழுவார்கள். அதைப் பகல் நேரத்தில் (கீழே) விரித்துக் கொண்டு அதன் மீது அமர்வார்கள். 
மக்கள் நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்து அவர்களுடன் சேர்ந்து தொழுவார்கள். இறுதியில் (இவ்வாறு இரவில் வந்து தொழும்) மக்கள் (எண்ணிக்கை) அதிகமாம் விடவே, நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, 'மக்களே! உங்களால் இயன்ற (நற்) செயல்களையே செய்துவாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்) செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்' என்றார்கள்.77 
(ஸஹீஹுல் புகாரி: 5861. , அத்தியாயம்: 7. தயம்மும்)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது,(எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். 
என ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
(ஸஹீஹுல் புகாரி: 6464. , அத்தியாயம்: 7. தயம்மும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக