வியாழன், 1 அக்டோபர், 2020

அல்லாஹ்வை அழைக்கும் முறைகள்

வினாடி வினா 

நாம் அல்லாஹ்வை எவ்வாறு அழைக்க வேண்டும்?


விடை: 

1. மிக்க தாழ்மையாகவும் அந்தரங்கமாகவும் வேண்டியவற்றைக் கேளுங்கள்

(ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மிக்க தாழ்மையாகவும் அந்தரங்கமாகவும் (அத்தகைய) உங்கள் இறைவனிடமே (உங்களுக்கு வேண்டியவற்றைக் கோரி) பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (7:55)


2. அல்லாஹ்வின் திருநாமங்களைக் கொண்டு அழையுங்கள்

அல்லாஹ்வுக்கு மிக அழகான திருப்பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் துஆ கேளுங்கள்.) அவனுடைய திருப்பெயர்களில் தவறிழைப்பவர்களை நீங்கள் விட்டு விடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் கொடுக்கப்படுவார்கள். (7:180)

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. அவனுக்கு அழகான (திருப்) பெயர்கள் இருக்கின்றன. (அவற்றில் எதைக் கொண்டேனும் அவனை அழையுங்கள்.) (20:8)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக