சனி, 3 அக்டோபர், 2020

அல்லாஹ்வை துதிப்பதால் நம்பிக்கையாளர்கள் அடையும் பலன்

வினாடி வினா

அல்லாஹ்வை துதிப்பதால் நம்பிக்கையாளர்கள் அடையும் பலன் என்ன?


விடை: நம்பிக்கையாளர்களின் உள்ளங்கள் நிம்மதி அடைகின்றன.


ஆதாரம்:

மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாக நிம்மதி அடையும் என்பதை (நபியே!) அறிந்துகொள்வீராக. (13:28)



வியாழன், 1 அக்டோபர், 2020

மரணித்த பெற்றோருக்கு நன்மை செய்தலில் மார்க்கம் அனுமதித்த வழிகாட்டல்கள்

வினாடி வினா 

மரணித்த பெற்றோருக்கு நன்மை செய்தலில் மார்க்கம் அனுமதித்த வழிகாட்டல்கள் என்னென்ன?


விடை:

பெற்றோர் நேர்ச்சை செய்திருந்து அல்லது நிய்யத்துடன் இருந்து அதை அவர்கள்

செய்ய இயலாது மரணித்து விட்டிருப்பின், அவர்களின் நேர்ச்சையை நிறைவேற்றுவது

பெற்றோருக்கு நன்மை செய்தலில் அடங்கும்.


ஆதாரம்:

1. தர்மம் செய்தல்

ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார்.

அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம் செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என்றார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 1388. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


2. நோன்பு நோற்றல்

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது' என்றார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 1953. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


3. ஹஜ் செய்தல்

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

(உக்பா இப்னு ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று,

'(இறைத்தூதர் அவர்களே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார்' என்றார்.அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீ தானே

அதை நிறைவேற்றுவாய்?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (நானே நிறைவேற்றுவேன்)'

என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்' என்றார்கள்.*

(ஸஹீஹுல் புகாரி: 6699. , அத்தியாயம்: 7. தயம்மும்)


4. துஆச் செய்தல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும்

நின்றுவிடுகின்றன; 1.நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 3358., அத்தியாயம்: 25. வசியத் - இறுதி விருப்பம்)


👆🏼👆🏼👆🏼

எனவே இவற்றை உற்றுநோக்கும்போது 

  1. இறந்தவருக்கு நிய்யத் அல்லது  நேர்ச்சை இருந்திருக்குமாயின், மார்க்க ரீதியான அல்லாஹ்வின் கடனாக அமைந்து விட்ட விஷயங்களை நாம் செய்யும் போது பெற்றோருக்கு பலனளிக்கும். 
  2. உலக ரீதியான கடன்கள் மற்றும் வஸிய்யத்தை நிறைவேற்றுவது பெற்றோருக்கு பலனளிக்கும். 
  3. அதோடு நாம் செய்யும் பிரார்த்தனைகளும் பலனளிக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.


செயல்களில் தீயவை

வினாடி வினா 

செயல்களில் தீயவை என்ன?

  1. திருப்பி கொடுக்க வேண்டும் என்று எண்ணம் இல்லாமல் கடன் வாங்குவது
  2. கொலை செய்வது
  3. மார்க்கத்தின் பெயரால் புதியவைகளை உண்டாக்குவது
  4. புறம் பேசுவது

விடை: 3. மார்க்கத்தின் பெயரால் புதியவைகளை உண்டாக்குவது

ஆதாரம்:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  (ஏதேனும் முக்கிய விஷயம் குறித்து எச்சரிக்கை செய்து) உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்துவிடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப் போவது குறித்து "எதிரிகள் காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்" என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பெற்றுள்ளோம்" என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள். மேலும், "அம்மா பஅத் (இறைவாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்" என்று கூறுவார்கள். பிறகு "ஒவ்வோர் இறை நம்பிக்கையாளருக்கும் அவரது உயிரைவிட நான் நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன். (ஆகவே,) எவர் (இறக்கும்போது) ஒரு செல்வத்தை விட்டுச்செல்கிறாரோ அது அவருடைய குடும்பத்தாருக்குரியதாகும். எவர் (இறக்கும்போது) ஒரு கடனை அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்செல்கின்றாரோ அவர்கள் என்னிடத்தில் வரட்டும். என்மீதே (அவர்களைப் பராமரிப்பதும் அவர்களது கடனை அடைப்பதும்) பொறுப்பாகும்" என்று கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்: 1573., அத்தியாயம்: 7. ஜும்ஆ)

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும் என்று விரும்பினால்

வினாடி வினா 

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும் என்று விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?


விடை: அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும். 


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்' என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!'

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 2067. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் 


பெற்றோரை புண்படுத்துதல்

வினாடி வினா 

பெற்றோரை புண்படுத்துவதை அல்லாஹ் எந்த அளவுக்கு வெறுக்கிறான் என்பதை குறிப்பிடும் குர்ஆன் வசனங்களில் ஒன்றையும் ஹதீஸ்களில் ஒன்றையும் குறிப்பிடுக.


விடை:

(நபியே!) உமது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உம்மிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ' என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுவீராக. (17:23)

அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். 

(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'பெரும்பாவங்களிலேயே மிகப் பெரிய பாவங்களை உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம் (தெரிவுயுங்கள்), அல்லாஹ்வன் தூதரே' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும் ஆகும்' என்றார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 6273. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)


இறைமறுப்பாளர்களுக்காக கேட்கப்படும் மன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா?

வினாடி வினா 

இப்ராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் தன் தந்தைக்காக கேட்ட பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டானா?


விடை:  ஏற்றுக்கொள்ளவில்லை


ஆதாரம்:

இணைவைத்து வணங்குபவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல; அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவிர்களாகயிருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்? இப்றாஹீம் (நபி) தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தன் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவே தவிர வேறில்லை. (அவருடைய தந்தை) அல்லாஹ்வுக்கு எதிரி எனத் தெளிவாகத் தெரிந்ததும் அ(வருக்காக மன்னிப்புக் கோருவ)திலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்றாஹீம் அதிகம் பிரார்த்திப்பவரும் மிக இரக்கமும் அடக்கமும் உடையவரும் ஆவார். (9:113-114)

இப்ராஹீம் அலை அவர்களின் தந்தை ஆஜர் அவர்கள் அல்லாஹ்வை இறைவனாக ஏற்க மறுப்பவராகவும், முஷ்ரீக்கூன்களினல் ஒருவராக இருந்த காரணத்தால் அவருக்கு செய்யப்பட்ட பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்கவில்லை.

ஆகவே நாம் ஈமான் கொள்ளாதவர்களுக்கு(காஃபிர்களுக்கு) அல்லாஹ்விடம் அவர்களுக்கு நேர்வழி காட்ட பிரார்த்தனை செய்யலாம் தவிர, அவர்களுக்காக பாவமன்னிப்பு கேட்க அனுமதி இல்லை.


அல்லாஹ் தடைச் செய்துள்ள மற்றும் வெறுத்து விலக்கியுள்ள மூன்று விஷயங்கள்

வினாடி வினா 

அல்லாஹ் மூன்று விஷயங்களை தடைச் செய்துள்ளான்; மூன்றை வெறுத்து விலக்கியுள்ளான். அவை என்ன?


விடை: 

அல்லாஹ் தடை செய்துள்ள விஷயங்கள்:

  1. பெற்றோரை புண்படுத்துவது 
  2. அடுத்தவருக்கு தர வேண்டியதை தர மறுப்பது; அடுத்தவருக்கு உரியதைத் தருமாறு கேட்பது.
  3. பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது. 

அல்லாஹ் வெறுத்து விலக்கியுள்ள விஷயங்கள்:

  1. தேவையின்றி அதிகமாகப் பேசுவது. 
  2. அதிகமாகக் கேள்வி, அல்லது யாசகம் கேட்பது.
  3. செல்வத்தை வீணாக்குவது.


ஆதாரம்:

வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

"சலாமுன் அலைக்க (உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்); இறைவாழ்த்துக்குப் பின்! அல்லாஹ் மூன்று விஷயங்களைத் தடை செய்துள்ளான்; மூன்றை (வெறுத்து) விலக்கியுள்ளான். பெற்றோரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுத்தவருக்குரியதை) தருமாறு கேட்பது ஆகியவற்றைத் தடை செய்துள்ளான். (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமற்றதை)ப் பேசுவதையும், (தேவையின்றி) அதிகமாகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் (வெறுத்து) விலக்கியுள்ளான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என முஃகீரா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கு (பதில்) எழுதினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 3537., அத்தியாயம்: 30. நீதித்துறை தீர்ப்புகள் - இஸ்லாமிய தீர்ப்புகள்)