வியாழன், 31 டிசம்பர், 2020

டிசம்பர் 2020 மாதாந்திர கேள்விகள்

நம்பிக்கைக் கொண்டு, இறைவனை அஞ்சுவோருக்கு ____ கூலியே சிறந்தது.

வினாடி வினா

நம்பிக்கைக் கொண்டு, இறைவனை அஞ்சுவோருக்கு ____ கூலியே சிறந்தது.

1. மறுமையின்

2. இவ்வுலகின்


விடை: 1. மறுமையின்

ஆதாரம்:

எனினும், (நமக்குப்) பயந்து நடக்கும் நம்பிக்கையாளர்களுக்கு மறுமை(யில் நாம் கொடுக்கும்) கூலியோ (இதைவிட) மிக மேலானதாகும். (யூஸுஃப் கூறியவாறு தானியங்கள் பத்திரப்படுத்தப்பட்டு வந்தன. பஞ்சமும் ஏற்பட்டு, கன்ஆனிலிருந்த இவருடைய சகோதரர்கள் தானியத்திற்காக யூஸுஃபிடம் வந்தனர்.) (12:57)


அல்லாஹ்வின் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலையும், அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலையும் எதை ஒத்திருக்கிறது?

வினாடி வினா

அல்லாஹ்வின் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலையும், அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலையும் எதை ஒத்திருக்கிறது?


விடை:

ஆதாரம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 1429., அத்தியாயம்: 6. பயனிகள் தொழுகையும் சுருக்கத் தொழுகையும்)


நம் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது எதை விடச் சிறந்ததாகும்?

வினாடி வினா

நம் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது எதை விடச் சிறந்ததாகும்?


விடை: அரபுகளின் உயரிய செல்வமான சிகப்பு ஒட்டகங்களை தர்மம் செய்வதை விட.


ஆதாரம்:

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, 'அல்லாஹ் எவருடைய கரத்தில் வெற்றியைத் தரவிருக்கிறானே அத்தகைய ஒரு மனிதரிடம் (நாளைக்கு) நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியைத் தருவேன்' என்று கூறக் கேட்டேன். உடனே, நபித்தோழர்கள், அதை யாரிடம் நபி(ஸல்) அவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்து நின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று விரும்பியவர்களாக மறுநாள் வந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அலீ எங்கே?' என்று கேட்டார்கள். 'அவருக்குக் கண்வலி' என்று கூறப்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், அலீ(ரலி) அவர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களின் கண்களில் (தம்) எச்சிலை உமிழ்ந்தார்கள். உடனே அவர்களின் கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாம்விட்டது. உடனே, அலீ(ரலி), 'நம்மைப் போல் (முஸ்லிம்களாய்) ஆகும் வரை நாம் அவர்களுடன் போர் புரிவோம்' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நிதானமாகச் சென்று அவர்களின் களத்தில் இறங்குவீராக! பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்களின் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின் உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்' என்றார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 2942. , அத்தியாயம்: 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்)


காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்

வினாடி வினா

யார் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்?


விடை: ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர் மற்றும் மாதந்தோறும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பது


ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.

இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 2159., அத்தியாயம்: 13. நோன்பு)



எவர்களுக்கு மன்னிப்பும் பெரும் கூலியும் உண்டு?

வினாடி வினா

எவர்களுக்கு மன்னிப்பும் பெரும் கூலியும் உண்டு?


விடை: மறைவான சமயத்திலும், தங்கள் இறைவனுக்குப் பயப்படுகிறவர்களுக்கு

ஆதாரம்:

நிச்சயமாக எவர்கள் மறைவான சமயத்திலும், தங்கள் இறைவனுக்குப் பயப்படுகிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு. (67:12)


முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை

வினாடி வினா

எந்த இரண்டு தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை?


விடை: ஸுப்ஹு மற்றும் இஷா

ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்.' 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 657. , அத்தியாயம்: 10. பாங்கு)


குர்ஆனை ஓதுகின்ற நல்லவரின் நிலை

வினாடி வினா

குர்ஆனை ஓதுகின்ற நல்லவரின் நிலையானது போன்றதாகும்?

1. பேரிச்சம்பழம்

2. எலுமிச்சை

3. துளசிச் செடி

4. குமட்டிக்காய்


விடை: 2. எலுமிச்சை

ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. மற்ற நற்செயல்கள் புரிந்துகொண்டு) குர்ஆன் ஓதாமலிருப்பவர், பேரிச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று; (ஆனால்) அதற்கு வாசனை கிடையாது. தீயவனாக (நயவஞ்சகனாக)வும் இருந்துகொண்டு, குர்ஆனையும் ஓதிவருகிறவனின் நிலையானது, துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; சுவையோ கசப்பு. தீமையும் செய்துகொண்டு, குர்ஆனையும் ஓதாமலிருப்பவனின் நிலையானது, குமட்டிக்காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பு; அதற்கு வாசனையும் கிடையாது. 

என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார் 

(ஸஹீஹுல் புகாரி: 5020. , அத்தியாயம்: 66. குர்ஆனின் சிறப்புகள்)


யார் விஷயத்தில் நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி நபி(ஸல்) கூறினார்கள்?

வினாடி வினா

யார் விஷயத்தில் நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும் தன் அறிவுரையை ஏற்றுக் கொள்ளும்படி நபி(ஸல்) கூறினார்கள்?

1. பெண்கள்

2. அனாதைகள்

3. இரண்டுமே


விடை: 1. பெண்கள்


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

பெண்களின் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியேவிட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 3331. , அத்தியாயம்: 60. நபிமார்களின் செய்திகள்)


நரகவாசிகள் சொர்க்கவாசிகளை நோக்கி எதை அவர்களின் மீது கொட்டுமாறு கேட்பார்கள்?

வினாடி வினா

நரகவாசிகள் சொர்க்கவாசிகளை நோக்கி எதை அவர்களின் மீது கொட்டுமாறு கேட்பார்கள்?


விடை: தண்ணீரை

ஆதாரம்:

நரகவாசிகள் சொர்க்கவாசிகளை நோக்கி ‘‘எங்கள் மீது சிறிது நீரைக் கொட்டுங்கள். அல்லது இறைவன் உங்களுக்கு (புசிக்க) அளித்திருப்பவற்றில் (ஒரு சிறிதேனும்) எங்களுக்குத் தாருங்கள்'' என்று (கெஞ்சிக்) கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘‘நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இவ்விரண்டையும் (விலக்கி) தடைசெய்து விட்டான்'' என்று பதிலளிப்பார்கள். (7:50)


யாருக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது?

வினாடி வினா

யாருக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது?


விடை: அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யாக்கி, அதைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டவர்களுக்கு.

ஆதாரம்:

நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அதைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ அவர்களுக்கு (இறைவனின் அருளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தை அடையவே மாட்டார்கள். குற்றவாளிகளை இவ்வாறே நாம் தண்டிப்போம். (7:40)


எது இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக்கூடியது?

வினாடி வினா

இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக்கூடிய ____ தின்னாதீர்கள். 

1. கோதுமை

2. வட்டியை

3. நெருப்பை


விடை: 2. வட்டியை

ஆதாரம்:

நம்பிக்கையாளர்களே! (அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக்கூடிய வட்டியை (வாங்கி)த் தின்னாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். (3:130)



உங்களுக்குப் ___ நீங்கள் தானம் செய்யாத வரை நிச்சயமாக நீங்கள் நன்மையை அடைய மாட்டீர்கள்.

வினாடி வினா

உங்களுக்குப் ___ நீங்கள் தானம் செய்யாத வரை நிச்சயமாக நீங்கள் நன்மையை அடைய மாட்டீர்கள்.

1. விரும்புவதிலிருந்து 

2. சம்பாதித்ததிலிருந்து 

3. இரண்டும் இல்லை


விடை: 1. விரும்புவதிலிருந்து

ஆதாரம்:

உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் (தானமாக) செலவு செய்யாத வரை நிச்சயமாக நீங்கள் நன்மையை அடைய மாட்டீர்கள். நீங்கள் எதை தானம் செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான். (3:92)


தனது கர்ப்பத்தில் உள்ள குழந்தையை அல்லாஹ்வுக்காக முற்றிலும் அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்தவர் யார்?

வினாடி வினா

தனது கர்ப்பத்தில் உள்ள குழந்தையை அல்லாஹ்வுக்காக முற்றிலும் அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்தவர் யார்?

1. ஃபிர்அவ்னின் மனைவி 

2. இம்ரானின் மனைவி 

3. மர்யம் (அலை)


விடை: 2. இம்ரானின் மனைவி 

ஆதாரம்:

இம்ரானுடைய மனைவி (கர்ப்பமானபொழுது ஆண் குழந்தை பெற விரும்பி இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! நிச்சயமாக நான் என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால், (அதை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (பிரார்த்தனைகளை) நன்கு செவியுறுபவன், (மனதில் உள்ளவற்றை) நன்கறிபவன்'' என்று (பிரார்த்தித்துக்) கூறியபின், (3:35)


எந்த திக்ரை ஒவ்வொரு நாளும் நூறு முறை துதித்தால், அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன?

வினாடி வினா

எந்த திக்ரை ஒவ்வொரு நாளும் நூறு முறை துதித்தால், அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன?


விடை: சுப்ஹானல்லாஹ்

ஆதாரம்:

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், "உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?" என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், "எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?" என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை ("சுப்ஹானல்லாஹ்" என்று கூறித்) துதிக்க, அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன" என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 5230., அத்தியாயம்: 48. பிரார்த்தனைகள்)


தொட்டில் குழந்தையாக இருக்கும் பொழுது பேசிய நபி

வினாடி வினா

தொட்டில் குழந்தையாக இருக்கும் பொழுது பேசிய நபி யார்? 

1. ஆதம் நபி 

2. மூஸா நபி

3.  ஈஸா நபி


விடை: 3.  ஈஸா நபி

ஆதாரம்:

(மேலும், மர்யமை நோக்கி) வானவர்கள் ‘‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன் (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான்'' என்றும் ‘‘அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம்'' என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்'' என்றும் கூறினார்கள். 

மேலும், ‘‘அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும் பொழுது (தன் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றியு)ம், (தன் நபித்துவத்தைப் பற்றி) வாலிபத்திலும் மனிதர்களுடன் பேசுவார். தவிர, நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராகவும் இருப்பார்'' (என்றும் கூறினார்கள்.) (3:45-46)


புதன், 30 டிசம்பர், 2020

கஷ்டங்களில் இந்த இரண்டு விஷயங்களை கொண்டு உதவி தேடுவோம்

வினாடி வினா

கஷ்டங்களில் நாம் எந்த இரண்டு விஷயங்களை கொண்டு உதவி தேடுமாறு அல்லாஹ் நம்மை ஏறியுள்ளான்?


விடை: பொறுமை மற்றும் தொழுகையைக் கொண்டு

ஆதாரம்:

(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே தவிர (மற்றவர்களுக்கு) மிகப்பளுவாகவே இருக்கும். (2:45)


மறதியாக சாப்பிட்டுவிட்டால் நோன்பை விட வேண்டுமா?

வினாடி வினா

மறதியாக சாப்பிட்டுவிட்டால் நோன்பை விட வேண்டுமா?


விடை: வேண்டாம்

ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.' 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 1933. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


மறுமை நாளில் முதன் முதலில் மண்ணறை பிளந்து எழுபவர்

வினாடி வினா

மறுமை நாளில் முதன் முதலில் மண்ணறை பிளந்து எழுபவர் யார்?


விடை: முஹம்மது நபி(ஸல்)

ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் ஆதமின் மக்கள் (மனிதர்கள்) அனைவருக்கும் தலைவன் நானே. முதன் முதலில் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை செய்பவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவனும் நானே.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 4575., அத்தியாயம்: 43. நபிமார்களின் சிறப்புகள்)


இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு நினைவுப்படுத்த வேண்டியவை

வினாடி வினா

இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு எதை நினைவுப்படுத்த வேண்டும்?


விடை: “லா இலாஹ இல்லல்லாஹ்" எனும் கலிமாவை

ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு "லா இலாஹ இல்லல்லாஹ்" ("அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை" எனும் கலிமா)வை நினைவுபடுத்துங்கள்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது:

(ஸஹீஹ் முஸ்லிம்: 1672., அத்தியாயம்: 11. இறுதிக் கடன்கள்)


வெள்ளி, 11 டிசம்பர், 2020

மறுமை நாளில் முஅத்தின்கள் காணப்படுவார்கள்?

வினாடி வினா

மறுமை நாளில் முஅத்தின்கள்(பாங்கு சொல்பவர்கள்) எவ்வாறு காணப்படுவார்கள்?



விடை: மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்.


ஆதாரம்:

ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர் (முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் முஆவியா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 631., அத்தியாயம்: 4. தொழுகை)




வியாழன், 10 டிசம்பர், 2020

நம்பிக்கையாளர்கள் எவ்வாறு தொழுவார்கள்?

வினாடி வினா

நம்பிக்கையாளர்கள் மிக்க __________ தொழுவார்கள்


1. உள்ளச்சதோடு

2. தூய்மையோடு

3. துரிதமாக



விடை: 1. உள்ளச்சதோடு


ஆதாரம்:

நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டனர். அவர்கள் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள்.

(23:1-2)



புதன், 9 டிசம்பர், 2020

இறந்தவரை பின்தொடர்ந்து செல்லும் மூன்று விஷயங்கள்

வினாடி வினா


இறந்தவரை மூன்று பொருள்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அது என்ன?


1. குடும்பம்

2. செல்வம்

3. செயல்கள்


விடை: 3. செயல்கள்


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

இறந்தவரை மூன்று பொருள்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவரின் குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும். 

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 6514. , அத்தியாயம்: 7. தயம்மும்)



செவ்வாய், 8 டிசம்பர், 2020

அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்பவர்

வினாடி வினா

அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்பவர் எதை உண்பதாக அல்லாஹ் கூறுகிறான்?


1. நெருப்பை

2. சீல்

3. விஷம்



விடை: 1. நெருப்பை


ஆதாரம்:

எவர்கள் அநாதைகளின் பொருள்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிற்றில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கிறார்கள். பின்னர் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவார்கள். (4:10)


திங்கள், 7 டிசம்பர், 2020

யாருக்கு கணக்கின்றி கூலி கொடுக்கப்படும்?

வினாடி வினா

யாருக்கு கணக்கின்றி கூலி கொடுக்கப்படும்?


1. உயிர்த்தியாகிகளுக்கு

2. பொறுமையாளர்களுக்கு

3. ஏழைகளுக்கு


விடை: 2. பொறுமையாளர்களுக்கு


ஆதாரம்:

(நபியே!) கூறுவீராக: ‘‘நம்பிக்கைகொண்ட (என்) அடியார்களே! உங்கள் இறைவனுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே கொடுக்கப்படும். (39:10)


ஞாயிறு, 6 டிசம்பர், 2020

இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, கேட்கப்படும் துஆக்கள் என்ன சிறப்பு பெறுகிறது?

வினாடி வினா

இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, கேட்கப்படும் துஆக்கள் என்ன சிறப்பு பெறுகிறது? 



விடை: அல்லாஹ் அந்த துஆக்களை அங்கீகரிக்கிறான்.


ஆதாரம்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிப்பேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுவான். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி.


சனி, 5 டிசம்பர், 2020

நபி(ஸல்) எப்பொழுது இரவுத் தொழுகை தொழுவார்கள்?

வினாடி வினா

நபி(ஸல்) எப்பொழுது இரவுத் தொழுகை தொழுவார்கள்? 



விடை: இரவின் பிற்பகுதியில் தொழுவார்கள்.


ஆதாரம்:


அஸ்வத் அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள்,இரவின் ஆரம்ப நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் உறங்குவார்கள். இரவின் கடைசியில் எழுந்து தொழுவார்கள். பிறகு படுக்கைக்குச் செல்வார்கள். முஅத்தின் பாங்கு சொன்னதும் விழித்துக் குளிக்க வேண்டிய அவசியம் இருந்தால் குளிப்பார்கள். இல்லாவிட்டால் உளூச் செய்துவிட்டு (தொழுகைக்காகப்) புறப்படுவார்கள்' என்று விடையளித்தார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 1146. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)



வெள்ளி, 4 டிசம்பர், 2020

கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை

வினாடி வினா

கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை எது? 



விடை: தஹஜ்ஜத் தொழுகை


ஆதாரம்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் "கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை எது? ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "கடமையான தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, நடுநிசியில் தொழுவதாகும். ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும்"  என்று விடையளித்தார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 2158., அத்தியாயம்: 13. நோன்பு)


வியாழன், 3 டிசம்பர், 2020

குர்ஆனை ஓத ஆரம்பிப்பதற்கு முன்பு

வினாடி வினா

குர்ஆனை ஓத ஆரம்பிப்பதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும்? 


விடை: விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு காக்கும்படி அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோர வேண்டும்.


ஆதாரம்:

(நபியே!) நீர் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் (அதற்கு முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு காக்கும்படி அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!. (16:98)


புதன், 2 டிசம்பர், 2020

பெற்றோர் அல்லாஹ்விற்கு இணைவைக்கும்படி நிர்பந்தித்தால், என்ன செய்ய வேண்டும்?

வினாடி வினா

பெற்றோருடன் நல்ல முறையில் உறவை பேண மார்க்கம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறிருக்க, அவர்கள் நம்மை அல்லாஹ்விற்கு இணைவைக்கும்படி நிர்பந்தித்தால், என்ன செய்ய வேண்டும்? 



விடை: அவர்களுக்கு கீழ்ப்படிய கூடாது. ஆயினும், இவ்வுலக விஷயத்தில் அவர்களுக்கு (நீதமாக) உதவி செய்து நேசித்து வர வேண்டும்.


ஆதாரம்:

எனினும், (இறைவன் என்று) நீ அறிந்துகொள்ளாத ஒரு பொருளை எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டாம். ஆயினும், இவ்வுலக விஷயத்தில் நீ அவர்களுக்கு (நீதமாக) உதவி செய்து (அன்பாக) நேசித்துவா. எவ்விஷயத்திலும் என்னையே நோக்கி நிற்பவர்களின் வழியை நீ பின்பற்றி நட. பின்னர், நீங்கள் அனைவரும் நம்மிடமே வரவேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அச்சமயம் நான் உங்களுக்கு அறிவுறுத்துவேன்'' (என்று கூறினோம்). (31:15)


செவ்வாய், 1 டிசம்பர், 2020

ஈமானை புதுப்பித்துக் கொள்வது எப்படி?

வினாடி வினா

நாம் நம் ஈமானை எவ்வாறு புதுப்பித்துக் கொள்ளலாம்? 



விடை: லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை (கூறுவதை) அதிகப்படுத்திக் கொள்வதன் மூலம்


ஆதாரம்:

நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் “”உங்களது ஈமானை புதுப்பித்துக் கொள்ளுங்கள்” என்று கூறியபோது தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எவ்வாறு எங்களது ஈமானை புதுப்பித்துக் கொள்வது?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை (கூறுவதை) அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)


ஞாயிறு, 29 நவம்பர், 2020

யார் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறார்கள், அவர்கள் அவர்களுக்குள் ஷைத்தானுடைய தவறான எண்ணம் ஊசலாடினால் என்ன செய்வார்கள்?

வினாடி வினா

யார் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறார்கள், அவர்கள் அவர்களுக்குள் ஷைத்தானுடைய தவறான எண்ணம் ஊசலாடினால் என்ன செய்வார்கள்?



விடை: அவர்கள் அல்லாஹ்வை நினைப்பார்கள். அதன் மூலம் விழிப்படைவார்கள்.


ஆதாரம்:

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள். (7:201)



சனி, 28 நவம்பர், 2020

யாருடைய உள்ளத்தில் அணுவளவு __________ இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.

வினாடி வினா

யாருடைய உள்ளத்தில் அணுவளவு __________ இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.


1. கோபம்

2. தற்பெருமை

3. கஞ்சத்தனம்



விடை: 2. தற்பெருமை


ஆதாரம்:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்" என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 147., அத்தியாயம்: 1. இறைநம்பிக்கை)



வெள்ளி, 27 நவம்பர், 2020

ரஹ்மானுடைய அடியார்கள் தானம் கொடுக்கும்பொழுது எதை பேணுவார்கள்?

வினாடி வினா

ரஹ்மானுடைய அடியார்கள் தானம் கொடுக்கும்பொழுது எதை பேணுவார்கள்?



விடை: நடுநிலையை பேணுவர்


ஆதாரம்:

அவர்கள் தானம் கொடுத்தால் அளவு கடந்தும் கொடுத்துவிட மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் கொடுப்பார்கள். (25:67)



வியாழன், 26 நவம்பர், 2020

நபி(ஸல்) தன் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று கருதியிராவிட்டால், எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாக என்ன செய்ய கட்டளையிட்டிருப்பார்கள் என கூறினார்கள்?

வினாடி வினா

நபி(ஸல்) தன் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று கருதியிராவிட்டால், எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாக என்ன செய்ய கட்டளையிட்டிருப்பார்கள் என கூறினார்கள்? 



விடை: பல் துலக்க


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாகப்) பல்துலக்கும்படி (மிஸ்வாக் செய்யும்படி) மக்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 7240. , அத்தியாயம்: 7. தயம்மும்)



புதன், 25 நவம்பர், 2020

குர்ஆன் ஓதுவதன் நன்மைகள்

வினாடி வினா

குர்ஆன் ஓதுவதன் நன்மைகள் என்ன?



விடை: குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும்.


ஆதாரம்:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 1470., அத்தியாயம்: 6. பயனிகள் தொழுகையும் சுருக்கத் தொழுகையும்)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி ஓதுகின்றவர் கடமை தவறாத கண்ணியமிக்கத் தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதைச்) சிரமத்துடன் திக்கித் திணறி ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு. இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "குர்ஆனை மிகுந்த சிரமத்துடன் ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு" என இடம்பெற்றுள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 1462., அத்தியாயம்: 6. பயனிகள் தொழுகையும் சுருக்கத் தொழுகையும்)


நபி(ஸல்) கூறினார்கள்: அல்லாஹ்வின் அருள்மறையான குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஒருவர் ஓதுவரானால், அவருக்கு ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை பத்து மடங்கு கொண்டதாகும். அலீப், லாம், மீம் ஓர் எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக அலிப் ஒர் எழுத்தாகும், லாம் ஓர் எழுத்தாகும், மீம் ஓர் எழுத்தாகும். (மூன்றும் மூன்று எழுத்துகளாகும். அம்மூன்றையும் ஒருவர் ஓதினால் ஒவ்வொன்றுக்கும் பத்து நன்மைகள் வீதம் முப்பது நன்மைகளைப் பெறுவார்). 

(திர்மிதி: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி))



செவ்வாய், 24 நவம்பர், 2020

தமக்கு ஒரு மகிழ்ச்சி அல்லது ஒரு துயரம் ஏற்படும் பொழுது, ஒரு இறை நம்பிக்கையாளரின் செயல்பாடு எப்படி அமையும்?

வினாடி வினா

தமக்கு ஒரு மகிழ்ச்சி அல்லது ஒரு துயரம் ஏற்படும் பொழுது, ஒரு இறை நம்பிக்கையாளரின் செயல்பாடு எப்படி அமையும்? 



விடை: ஒரு இறை நம்பிக்கையாளருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால், நன்றி செலுத்துவார். துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காப்பார்.


ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.

இதை ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 5726., அத்தியாயம்: 53. உலக ஆசை இல்லாமல் இருப்பதும்,எளிமையாக இருப்பதும்)




திங்கள், 23 நவம்பர், 2020

ஈது தொழுகைகளின் போது மாதவிடாய் வந்த பெண்களுக்குரிய சட்டம்

வினாடி வினா

வயதுக்கு வந்த பெண்கள், திருமணமானவர்கள், மாதவிடாய் வந்த பெண்கள் அனைவரும் ஈது தொழுகைக்குரிய இடங்களுக்கு வர வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்துகிறது. இதில் மாதவிடாய் வந்த பெண்களுக்கு உள்ள சட்டம் என்ன?



விடை: மாதவிடாய் வந்த பெண்கள் தொழுகையை தவிர்த்து மற்ற பிரார்த்தனைகளில் பங்கு பெற்றுக் கொள்ள வேண்டும். மாதவிடாய் வந்த பெண்கள் தொழுகின்ற இடத்தை விட்டு விலகி இருப்பார்கள்; மக்களுடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள்.


ஆதாரம்:


நாங்கள் இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதைவிட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் வந்து பனீ கலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் தங்களின் சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். அவரின் சகோதரி (உம்மு அதிய்யா) நபி(ஸல்) அவர்களோடு தம் கணவர் பங்கெடுத்த பன்னிரண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தார். 

'நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம். நோயாளியைக் கவனிப்போம். நான் நபி(ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெரு நாள் தொழுகைக்கு) செல்லாமல் இருப்பது குற்றமா?' என நான் கேட்டதற்கு, 'அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்றார். 

உம்மு அதிய்யா(ரலி) வந்தபோது 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா?' என நான் கேட்டதற்கு 'என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்; ஆம்! கேட்டேன்' எனக் கூறினார். இவர் நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் 'என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்' என்பதையும் சேர்த்தே கூறுவார். 

'கன்னிப் பெண்களும் மாதவிடாய்ப் பெண்களும் (பெருநாளன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்' என்றும் உம்மு அதிய்யா(ரலி) கூறினார். இதைக் கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? எனக் கேட்டதற்கு, 'மாதவிடாய்ப் பெண் அரஃபாவிலும் மற்ற (மினா முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா?' என்று உம்மு அதிய்யா(ரலி) கேட்டார்' என ஹஃப்ஸா அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 324. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


ஞாயிறு, 22 நவம்பர், 2020

பெண்கள் ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்வதற்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது என்ன செய்யக் கூடாது?

வினாடி வினா

பெண்கள் ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்வதற்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது என்ன செய்யக் கூடாது? 



விடை: நறுமணம் பூசிச் செல்லக் கூடாது


ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பெண்களே!) நீங்கள் இஷாத் தொழுகையில் கலந்துகொள்ள (பள்ளிவாசலுக்கு)ச் செல்லும் போது அந்த இரவில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள்.

இதை ஸைனப் பின்த் முஆவியா அஸ் ஸகஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 758., அத்தியாயம்: 4. தொழுகை)


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய துணைவியார் ஸைனப் பின்த் முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது;

நீங்கள் (ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்வதற்காகப்) பள்ளிவாசலுக்குச் செல்லும் போது நறுமணம் பூசாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 759., அத்தியாயம்: 4. தொழுகை)



சனி, 21 நவம்பர், 2020

ஜமாஅத் தொழுகை முடிந்து யார் முதலில் எழுந்து செல்வது, ஆண்களா அல்லது பெண்களா?

வினாடி வினா

ஜமாஅத் தொழுகை முடிந்த பின்பு பெண்கள் முதலாவதாக வெளியேறிச் செல்ல ஆண்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் இருந்தது.


1. சரி

2. தவறு



விடை: 1. சரி


ஆதாரம்:

உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருந்தார்கள்.

பெண்கள் ஆண்களைச் சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக கருதுகிறேன் என்று இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார்.

(ஸஹீஹுல் புகாரி: 837. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


உம்முஸலமா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் அதே இடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள்.

ஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்கு முன்னால் பெண்கள் திரும்பிச் செல்வதற்காகவே இப்படி நபி(ஸல்) செய்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன் என ஸுஹ்ரி கூறுகிறார்.

(ஸஹீஹுல் புகாரி: 870. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)



வெள்ளி, 20 நவம்பர், 2020

ஜமாத் தொழுகைகளில், பெண்களுக்கு சிறந்த வரிசை

வினாடி வினா

பள்ளியில் ஜமாத்தாக தொழுகின்றபோது, எந்த வரிசை பெண்களுக்கு சிறந்ததாகும்? 



விடை: கடைசி வரிசை


ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்ததது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 749., அத்தியாயம்: 4. தொழுகை)



வியாழன், 19 நவம்பர், 2020

மஸ்ஜிதுக்குச் செல்வதை விட்டு பெண்களை தடுக்கலாமா?

வினாடி வினா

மஸ்ஜிதுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதியும்; ஆண்கள் அவர்களை தடுக்கக் கூடாது என்ற தடையும் இருக்கிறது. 


1. சரி

2. தவறு



விடை: 1. சரி


ஆதாரம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரிடம் அவருடைய மனைவி பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவளை அவர் தடுக்க வேண்டாம். இதை சாலிம் (ரஹ்) அவர்கள் தம் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 751., அத்தியாயம்: 4. தொழுகை)


இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

உமர்(ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் 'உங்கள் கணவர்) உமர்(ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்' என்று கேட்கப் பட்டது. அதற்கு 'அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளனர்' என்று பதிலுரைத்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 900. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


புதன், 18 நவம்பர், 2020

கொட்டாவியின் போது என்ன செய்ய வேண்டும்?

வினாடி வினா


மார்க்கத்தின் அடிப்படையில் கொட்டாவியின் போது என்ன செய்ய வேண்டும்?



விடை: கொட்டாவியை முடியுமானவரை தடுத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தடுக்க முடியாத பட்சத்தில், நம் கையை வாயில் வைத்து மறைத்துக்கொண்டு “ஹா” என்று சம்பதமிடாமல் கொட்டாவி விடவேண்டும்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் தம்மால் முடிந்த வரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் 'ஹா' என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 3289. , அத்தியாயம்: 3. கல்வியின் சிறப்பு)



“அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜிம்” கூறுவதற்கான விளக்கத்தை கீழ்க்காணும் லிங்க்’கை கிளிக் செய்து படிக்கவும். 


https://www.islamkalvi.com/?p=118940