வியாழன், 31 டிசம்பர், 2020

நம் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது எதை விடச் சிறந்ததாகும்?

வினாடி வினா

நம் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது எதை விடச் சிறந்ததாகும்?


விடை: அரபுகளின் உயரிய செல்வமான சிகப்பு ஒட்டகங்களை தர்மம் செய்வதை விட.


ஆதாரம்:

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, 'அல்லாஹ் எவருடைய கரத்தில் வெற்றியைத் தரவிருக்கிறானே அத்தகைய ஒரு மனிதரிடம் (நாளைக்கு) நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியைத் தருவேன்' என்று கூறக் கேட்டேன். உடனே, நபித்தோழர்கள், அதை யாரிடம் நபி(ஸல்) அவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்து நின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று விரும்பியவர்களாக மறுநாள் வந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அலீ எங்கே?' என்று கேட்டார்கள். 'அவருக்குக் கண்வலி' என்று கூறப்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், அலீ(ரலி) அவர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களின் கண்களில் (தம்) எச்சிலை உமிழ்ந்தார்கள். உடனே அவர்களின் கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாம்விட்டது. உடனே, அலீ(ரலி), 'நம்மைப் போல் (முஸ்லிம்களாய்) ஆகும் வரை நாம் அவர்களுடன் போர் புரிவோம்' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நிதானமாகச் சென்று அவர்களின் களத்தில் இறங்குவீராக! பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்களின் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின் உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்' என்றார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 2942. , அத்தியாயம்: 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக