வினாடி வினா
அம்பு எய்வதில் தேர்ச்சி பெற்ற நபி யார்?
விடை: இஸ்மாயீல் (அலை)
ஆதாரம்:
ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்) நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்' என்று கூறினார்கள். உடனே, இரண்டு பிரிவினரில் ஒரு சாரார் அம்பெய்வதை நிறுத்தினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களுக்கென்ன ஆயிற்று? ஏன் அம்பெய்யாமலிருக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்?' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால் நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன். நீங்கள் அம்பெய்யுங்கள்' என்று கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: 2899. , அத்தியாயம்: 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக