வெள்ளி, 29 ஜனவரி, 2021

தூதர் (ஸல்) நாட்களிலேயே எந்த நாளை சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்றார்கள்

வினாடி வினா

தூதர் (ஸல்) மாதங்களிலேயே ரமளான் மாதத்தை சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்றார்கள். அதே போல் நாட்களிலேயே எந்த நாளை சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்றார்கள்?


விடை: ஆஷூரா நாளை

ஆதாரம்:

உபைதுல்லாஹ் பின் அபீயஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்களிலேயே இந்த (ஆஷூரா) நாளையும் மாதங்களிலேயே இந்த -ரமளான்- மாதத்தையும் தவிர வேறெதையும் சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்றதாக நான் அறியவில்லை" என்று விடையளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 2086., அத்தியாயம்: 13. நோன்பு)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக