வெள்ளி, 29 ஜனவரி, 2021

ஒரு பெண் தன் கணவர் உள்ளுரில் இருக்க, அவரின் அனுமதியில்லாமல் (நஃபில்) நோன்பு நோற்கலாமா?

வினாடி வினா

ஒரு பெண் தன் கணவர் உள்ளுரில் இருக்க, அவரின் அனுமதியில்லாமல் (நஃபில்) நோன்பு நோற்கலாம்.

1. சரி

2. தவறு


விடை: 2. தவறு

ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' 

ஒரு பெண் தன் கணவர் உள்ளுரில் இருக்க, அவரின் அனுமதியில்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவரின் அனுமதியில்லாமல் (யாரையும்) அவரின் இல்லத்திற்குள் அவள் அனுமதிக்கலாகாது. கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (அறவழியில் கணவரின் பொருளைச்) செலவிட்டால் (அதன் பலனில்) பாதி அவருக்கும் கிடைக்கும். 130. 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

இந்த ஹதீஸிலுள்ள (கூடுதல்) நோன்பு பற்றிய தகவல் (மட்டும்) மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. 

பகுதி 88 

(ஸஹீஹுல் புகாரி: 5195. , அத்தியாயம்: 5. குளித்தல்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக