இஸ்லாமிய வினாடி வினா
குர்ஆன் சுன்னா அடிப்படையில், நாளும் ஒரு கேள்வி!
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021
தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் _____ நாள்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும்
வினாடி வினா
தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் _____ நாள்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1. 4
2. 40
3. 400
விடை: 2. 40
ஆதாரம்:
புஸ்ரு இப்னு ஸயீத் அறிவித்தார்.
தொழுபவரின் குறுக்கே செல்பவர் பற்றி நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதை அறிந்து வருமாறு என்னை அபூ ஜுஹைம்(ரலி) அவர்களிடம் ஸைத் இப்னு காலித்(ரலி) அனுப்பு வைத்தார். 'தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது நாள்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஜுஹைம்(ரலி) விடையளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுன் னழ்ரு என்பவர் 'நாற்பது ஆண்டுகள்' என்று கூறினார்களா? அல்லது 'நாற்பது மாதங்கள்' அல்லது 'நாற்பது நாள்கள்' என்று கூறினார்களா? என்பது சரியாக தமக்கு நினைவில்லை என்கிறார்.
(ஸஹீஹுல் புகாரி: 510. , அத்தியாயம்: 8. தொழுகை)
“அநாதைகளைக் கடுகடுக்காதீர். ____ வெருட்டாதீர்.” என அல்லாஹ் கூறுகிறான்.
வினாடி வினா
“அநாதைகளைக் கடுகடுக்காதீர். ____ வெருட்டாதீர்.” என அல்லாஹ் கூறுகிறான்.
1. ஹிஜ்ரத் மேற்கொண்டோரை
2. யாசிப்பவர்களை
3. இரண்டுமே இல்லை
விடை: 2. யாசிப்பவர்களை
ஆதாரம்:
ஆகவே, (இவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் அநாதைகளைக் கடுகடுக்காதீர். யாசிப்பவரை வெருட்டாதீர். (93:9-10)
அல்லாஹ் எந்நோயையும் அதற்குரிய _______ அருளாமல் இறக்குவதில்லை.
வினாடி வினா
அல்லாஹ் எந்நோயையும் அதற்குரிய _______ அருளாமல் இறக்குவதில்லை.
1. உயிரழப்புகளை
2. நன்மைகளை
3. நிவாரணியை
விடை: 3. நிவாரணியை
ஆதாரம்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் எந்நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹுல் புகாரி: 5678. , அத்தியாயம்: 76. மருத்துவம்)
நம் தோற்றங்களையோ அல்லது நம் செல்வங்களையோ அல்லாஹ் பார்ப்பதில்லை. மாறாக, எதை பார்க்கிறான்?
வினாடி வினா
நம் தோற்றங்களையோ அல்லது நம் செல்வங்களையோ அல்லாஹ் பார்ப்பதில்லை. மாறாக, எதை பார்க்கிறான்?
விடை: உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கிறான்
ஆதாரம்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்: 5012., அத்தியாயம்: 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும் )
சாபிட்டப் பின் விரல்களை சூப்புவதின் நன்மை என்ன?
வினாடி வினா
சாபிட்டப் பின் விரல்களை சூப்புவதின் நன்மை என்ன?
விடை: உணவில் எதில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.
ஆதாரம்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும். அவற்றில் எதில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உங்களில் ஒருவர் உணவு உண்டால் (இறுதியில்) உணவுத் தட்டை வழித்து உண்ணட்டும்" என்றும், உங்களின் "எந்த உணவில் வளம் (பரகத்) உள்ளது” அல்லது "(உங்களின் எந்த உணவில்) உங்களுக்கு வளம் வழங்கப்படும்" (என்பதை அவர் அறியமாட்டார்)" என்றும் இடம்பெற்றுள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம்: 4140., அத்தியாயம்: 36. குடிபானங்கள்)
ஒருவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடந்தால், அவருக்கு அதன் மூலம் அல்லாஹ் எதை எளிதாக்குகிறான்?
வினாடி வினா
ஒருவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடந்தால், அவருக்கு அதன் மூலம் அல்லாஹ் எதை எளிதாக்குகிறான்?
1. சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை
2. பாடச்சாலைகளுக்கு செல்லும் பாதையை
3. இரண்டுமே இல்லை
விடை: 1. சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை
ஆதாரம்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும்வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான்.
யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான்.
அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச்சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், சிரமப்படுவோருக்கு உதவி செய்வது தொடர்பான குறிப்பு இடம்பெறவில்லை.
(ஸஹீஹ் முஸ்லிம்: 5231., அத்தியாயம்: 48. பிரார்த்தனைகள்)
-
வினாடி வினா மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷை எத்தனை மலக்குகள் சுமப்பர்? 1. 5 2. 6 3. 7 4. 8 விடை: 4. 8 ஆதாரம்: (நபியே!) வானவர்கள் அதன் கோடிகளில...
-
வினாடி வினா நயவஞ்சகனின்(hypocrites) அடையாளங்கள் என்ன? விடை: பேசும்போது பொய் பேசுவான், மோசடி செய்வான் மற்றும் வாக்களித்தால் மாறு செய்வான். ...
-
வினாடி வினா நரகத்தில் உள்ளவர்கள் எந்த மிருகத்தை போன்று குடி நீரை குடிப்பார்கள? 1. நாய் 2. ஒட்டகம் 3. எலி விடை: 2. ஒட்டகம் ஆதாரம்: அத்துடன் ...